சாதரணமாக மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க வேண்டுமெனில் நாம் அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களின் இணைய இணைப்பு மென்பொருளை பயன்படுத்தி இணைப்போம். ஆனால் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் எந்தவித மென்பொருளும் இன்றி இணையத்தை இணைக்க முடியும். ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க USB கேபிள் வேண்டும், இல்லையெனில் ஆன்ட்ராய்ட் பொபைல் போனிலும், உங்களது கணினியிலும் Wifi வசதி இருந்தால் அதை கொண்டும் இணையத்தை இணைக்க முடியும். USB கேபிள் மூலம் இணையத்தை இணைக்க அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான ஆன்ட்ராய்ட் USB ட்ரைவர்களை கணினியில் நிறுவ வேண்டும்.
ஆன்ட்ராய்ட் மொபைல் போன் கொண்டு இணையத்தை இணைக்க முதலில் மொபைல் போனில் Setting செல்ல வேண்டும்.