/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, February 2, 2012

14 வருடங்களுக்கான கூகுளின் அனைத்து லோகோவையும் ஒரே இடத்தில் காண



14 வருடங்களுக்கான கூகுளின் அனைத்து லோகோவையும் ஒரே இடத்தில் காண

கூகுள் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரிந்து விடும் நாம் ஏதோ இணையத்தை பற்றி பேச போகிறோம் என்று அந்த அளவிற்கு உலகில் பெரும்பாலானவர்களால் உபயோக படுத்தப்படும் தேடியந்திரமாகும். இந்த தளம் 1996 ஆம் ஆண்டு Stanford பல்கலைகழக மாணவர்களான Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இருவர்களால் "Back Rub" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரமாகும். பின்பு 1998 ஆம் ஆண்டு இதனை Google என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இன்று இந்த இமாலய இலக்கை அடைந்துள்ள நிறுவனமாகும். இந்த கூகுள் தேடியந்திரம் தன் லோகோவை அமைப்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறது.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது விசேஷங்கள், முக்கிய நிகழ்வுகள், அறிஞர்களின் சாதனைகள் வரும் நாட்களில் ஏற்ப தனது லோகவை அந்த நிகழ்விற்கு ஏற்றமாதிரி வடிவமைக்கிறது. இந்த லோகோக்கள் Doodles என்று அழைக்க படுகிறது. 


முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி Burning Man Festival என்ற விழாவுக்காக உலகம் முழுவதும் தன் லோகோவை மாற்றியது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கும் தன் லோகவை மாற்றி அனைவரிடமும் அந்த செய்தியை எளிதாக சேர்க்கிறது. இது வரை சுமார் 700 வைகயான லோகோக்களை பகிர்ந்துள்ளது. இதில் அதிக பட்சமாக அமெரிக்காவில் 300 லோகோக்களை பகிர்ந்துள்ளது.

  • கூகுளில் 1998ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தன்னுடைய லோகோவை அனைவரும் காணும் வசதியை கொடுத்துள்ளது. 
  • இந்த தளம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் அறியாதவர்கள் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
  • இதில் நான் குறிப்பிட்டுள்ள இடத்தில் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டு வரையில் கொடுக்க பட்டிருக்கும். அதில் உங்களுக்கு வருடத்தை க்ளிக் செய்து லோகோவை பார்த்து கொள்ளுங்கள்.

  • இது போன்று சுமார் 14 வருடங்களுக்கான லோகோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். 
  • மேலும் இந்த தளத்தில் நமக்கு பிடித்த லோகோவுக்கு ஓட்டு போடும் வசதியும் உள்ளது .

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget