/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, June 27, 2012

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ... பகுதி 2.


இதற்கு முந்தைய பதிவுகளில், நுகவோர் பாதுகாப்பு சட்டம், நீதிமன்றங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் யார் யார் மீது வழக்கு தொடர முடியும் என்பதையும் எப்படி வழக்கு தொடர முன்னோடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டிய்லிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங் கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1


Consumer Protection Act 1986

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

சூரிய ஒளி மின்சாரம்


பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.                                            

நிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு கால கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். அதனால் இம்முறையிலும் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலாது.

அணுமின் நிலையங்கள் (Atomic Power Plant) மூலம் உற்பத்தி செய்யும் பொழுது தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், ஆபத்து அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதுடன், விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைய கூடும். தொழில் நுட்பத்திலிலும்  பொறுப்புடன் செயல்படுவதிலும் சிறந்த மேலை நாடுகள் கூட, இத்திட்டத்தை கைவிட்டு வருகிறது.

இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரத்தை பெறக்கூடிய, சூரிய ஒளி மின்சாரமே எதிர்காலத்தில் நிலைத்து இருக்கும். இம்முறை எளிதானது. ஆபத்தில்லாதது, செலவில்லாதது. நம் தேவைக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். சூரிய ஒளி மின்சாரம் பற்றி முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் புத்தகங்கள் இல்லை. 



சூரிய ஒளி மின்சாரம் ( Solar Power Energy ) 

சூரிய ஒளி கதிகள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டைக் (PV - Photovoltaic) செல்களின் மீது விழும்பொழுது அது DC மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.


DC (Direct current) மின்சாரத்திற்கு பாசிடிவ், நெகடிவ் என இரு முனைகள் (Terminals) உண்டு.  இந்த முனைகளில் மின்சாரம் கிடைக்கும். இதன் திறன் 0.5 வோல்ட் ஆகவும் மிகவும் குறைவான அளவு ஆம்பியர் கரண்ட் ஆக இருக்கும். எனவே ஒரு செல்லிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு நாம் எதையும் இயக்க முடியாது. எனவே நமக்கு தேவைப்படும் வோல்ட் மற்றும் ஆம்பியர் கிடைக்கும் வகையில் பல செல்களை சீரியல் (SERIES) மற்றும் பேரலெல் (PARALLEL) முறையில் இணைத்து ஒரு மாடுல்ஸ் (MODULES) ஆக தயாரிக்கப்படுகிறது. இவை தான் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் திறன் 5 WATT முதல் 300 WATT இருக்கும். நம் தேவைக்கு ஏற்ப இவற்றை வாங்கி கொள்ளலாம். கிழே போட்டொ வோல்டைக் செல்லின் படம் தரப்பட்டுள்ளது.

SINGLE PHOTOVOLTAIC ( P V ) CELL

பொதுவாக 3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட் என ப்ல வோல்ட்டேஜ்களில் பல செல்களை இணைத்து பேனல் தயாரிக்கப்பட்டாலும், அதிக அளவில் பயன்படுவது 12 வோல்ட் பேனல்களே. கீழே பேனலின் படம் கொடுக்கப்பட்டுள்ளது.


இனி பி.வி. பேனல் மூலம் எப்படி மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்த பேனலில் சூரிய ஒளி படும்பொழுது மின் சக்தியாக மாறும். அவ்வாறு கிடைக்கும் டி.சி. மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. இது சூரிய ஒளியின் பிகாசத்திற்கு ஏற்ப கூடி குறையும். உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் பேனெல் 12 வோல்ட் /  80 வாட் என வைத்துக்கொள்வோம். 12 மணி உச்சி வெயில் இது  14 வோல்ட்டுக்கும் அதிகமான வோல்ட்டை கொடுக்கும். காலையிலும் மாலையிலும், மேக மூட்டம் இருக்கும் பொழுது  12  வோல்ட்டுக்கு குறைவான வோல்ட்டை தரும். எனவே அப்படியே இந்த மின்சாரத்தை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். எனவே பாட்டரி சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை மட்டுமே பாட்டரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சாதனம் தேவை. அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும்.
 சோலார் பேனலின் பாசிடிவ் முனையை சார்ஜ் ரெகுலேட்டரின் இன் புட்டில் ( INPUT) - பாசிடிவ் உடன் இணைக்கவேண்டும் . அதை போலவே நெகடிவ் முனையை நெகடிவ்வுடன் இணைக்கவேண்டும்.  சார்ஜ் ரெகுலேட்டரின் அவுட் புட்டில் (OUTPUT)  பாட்டரியின் பாசிடிவ் முனையை பாசிடிவ்வுடனும், நெகடிவ்வை நெகடிவ்வுடனும் இணைக்க வேண்டும்.  சார்ஜ் ரெகுலேட்டரின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் கண்டிரோலர் / ரெகுலேட்டெர்  7 AMPS, 10 AMPS ,20 AMPS  -- 12 volt /24 volt என்ற அளவுகளில் கிடைக்கும்.  இதற்கு உபயோகப்படும் பாட்டரி நாம் எல்லோரும் பாiர்த்திருக்கக்கூடியது தான். அதாவது கார் மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் 12 வோல்ட், 24 வோல்ட் பேட்டரிகள்தான். சோலார் மற்றும் இன் வெர்ட்டருக்கென டீப் சைக்கிள் பாட்டரியும் உண்டு. 

இனி பாட்டரிகளில் சேமிக்கப்படும் மின்சாரம் 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் ஆக இருக்கும். இந்த மின்சாரத்தை கொண்டு நம் வீட்டிலுள்ள மின் விளைக்கை எரிய வைக்க முடியாது. ஃபேன், டி.வி எதுவும் இந்த மின்சாரத்தில் இயங்காது. காரணம் இவையெல்லாம் 220 வோல்ட் ஏசி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. எனவே பாட்டரியில் சேமிக்கப்பட்டுள்ள 12 / 24 வோல்ட் டி.சி. மின்சாரத்தை  220 வோல்ட் ஏசி மின்சாரமாக மற்ற வேண்டும். இதற்கு இன்வெர்ட்டர் பயன்படுகிறது. கீழே படம்.


சோலார் பேனல், சார்ஜ் ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவைககள் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

மின்சார தேவையை கணக்கிடல்



இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சாதாரண பல்பு  மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது  0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 - 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட்  லாம்ப் ( CFL - COMPACT FLUORESENT LAMP )  தரும். அதாவது  நான்கில் ஒரு பங்கு மின்சாரமே தேவைப்படும். கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.


எனவே சாதாரண பல்புகளுக்கு பதில் CFL பல்புகளை உபயோகித்தால் மின் செலவு குறையும். சீலிங் ஃபேன் = 65 W -75 W, டி.வி = 100 W . இது கம்பெனி, மாடல்களை பொருத்து மாறுபடும். எனவே நம் டி.வி.யின் சர்வீஸ் மேனுவலை பார்க்கவேண்டும்.  இப்பொழுது நாம் எந்தெந்த சாதனங்களை எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு உபயோகிக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

சீலிங் ஃபேன்      6 மணி நேரம்    =   6 x 70 W  = 420 W
லைட்                    6 மணி நேரம்    =   6 x  40 W  = 240 W
டி.வி                       4 மணி நேரம்    =    4 x  100W = 400 W
ஆக மொத்தம் வாட்ஸ்   ------------------------        = 1060 W

இதைப்போலவே நாம் உபயோகிக்கும் சாதனங்கள் எத்தனை வாட்ஸ், எவ்வளவு நேரம் உபயோகிக்கிறோம் என்பதை கணக்கிட்டு மொத்த மின் தேவையை கணக்கிடலாம்.

இனி வோல்ட், கரண்ட், வாட்  என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பேச்சு வழக்கில் நாம் கரண்ட் என்று சொல்வோம். அது மின்சாரத்தை குறிக்கும். ஃபேன் மெதுவாக சுற்றினாலோ அல்லது டியூப் லைட் எரியாமல் விட்டு விட்டு எரிந்தால் லோ வோல்ட் என்று சொவோம். அடுத்தபடி கடையில் பல்பு வாங்கும் பொழுது 40W அல்லது 60 வாட் பல்பு கொடுங்கள் என்று கேட்ப்போம். அதற்கு மேல் நமக்கு மின்சாரத்தை பற்றி தெரியாது. அவசியம் வோல்ட், கரண்ட், வாட்ஸ் என்றால் என்ன? அவை ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

வோல்ட் (VOLT)


மின்சாரத்திலிருக்கும் எலெக்ட்ரான்களை (ELECTRONS) லோடு அல்லது சர்க்கியூட்  என அழைக்கப்படும் நம் மின்சாதனத்திற்கு அனுப்பும் அழுத்தமே வோல்ட் ஆகும்.  எனவேதான் வோல்ட்டை மின் அழுத்தம் என தமிழில் சொல்கிறோம். மேலே உள்ள படத்தில் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயத்தில் தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதன் அடிப்பாகத்தில் 1 cm அளவுள்ள குழாய் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  அடுத்ததாக அதே தொட்டி 10 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது அதன் வெளியேறு குழாய் வழியாக வெளிவரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருக்கும். 10 மீட்டர் உயரத்திலிருந்து வெளிவரும்  தண்னீரின் அழுத்தம் 10 மடங்கு அதிகமாக இருக்கும்.6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட் பாட்டரிகளை இப்பொழுது ஒப்பிட்டு பார்ப்போம். 24 வோல்ட் பாட்டரி 6 வோல்ட் பாட்டரியை விட 4 மடங்கு மின் அழுத்தம் அதிகமானது. அதைப்போல 12 வோல்ட் பாட்டரியை விட 2 மடங்கு அதிக மின் அழுத்தம் கொண்டது.

கரண்ட் (CURRENT)
தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் வழியாக வாட்டர் மாலிகுல்ஸ் என்ற தண்ணீர் வெளியேறும் அளவை போல மின்சார எலெக்டிரான்ஸ் வெளியேறும் அளவை கரண்ட் குறிக்கும். அதாவது நம் சாதனம் உபயோகிக்கும் எலெக்டிரான்ஸ் அளவை குறிக்கும். பொதுவாக கரண்ட் என்பது ஆம்பியர் என அழைக்கப்படும்.

மேலே உள்ள படத்தை பாருங்கள். முதல் தொட்டியின் அவுட்லெட் பைப் 1 செ.மி, இரண்டாவது படத்தில் 10 செ.மி பைப் இணைக்கப்பட்டுள்ளது. 1 செ.மி அளவிலுள்ள குழாய் 1 மணி நேரத்தில் 100 லிட்டர் தண்ணீர் வெளிவருவதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 10 செ.மி அளவுள்ள குழாய் மூலம் 100 லிட்டருக்கு அதிகமாக பல மடங்கு தண்ணீர் வெளிவருமல்லவா?. ஆமாம். அதைப்போலவே மின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள சாதனம் அதிக அளவில் மின்சாரத்தை எடுக்கக்கூடியதென்றால், அதற்கேற்ப இணைப்பு வயரின் பருமனை ( cross-sectional area) அதிகரிக்க வேண்டும்.

இப்பொழுது  Ohms's Law  பற்றி தெரிந்து கொள்வோம்.

POWER = VOLTAGE  X  CURRENT   ( P = V x  I )
 or
WATT  = VOLTAGE  X  AMPERE  ( W = V x  A )

இதுதான் அடிப்படை விதி. இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது 2 தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு  டி.வியை எடுத்துக்கொள்ளலாம். அது இயங்கும் வோல்ட் 220. 100 வாட் என டிவி. காபினட்டில் போட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது எவ்வளவு கரண்டை எடுக்கும்?   
W = V x A  
ie   100 W = 220 x A
ie   100 / 220 = A  (Watt divided by Volt)
ie   = 0.455 Amp

அதாவது 0.455 ஆம்பியர் கரண்ட் அதற்கு தேவை.

இனி சீரியஸ் ( SERIES CONNECTION) இணைப்பு மற்றும் பேரலல் (PARALLEL CONNECTION)  பற்றி பார்க்கலாம்.

சீரியஸ் இணைப்பு


( ஒவ்வொரு பாட்டரியும் 1.5 V / 1.7 Amp )

இந்த படத்தில் 3 பாட்டரிகள் (1.5V,1.7Amp) சீர்யஸ் முறையில் இணைக்க பட்டுள்ளது.முதல் பாட்டரியின் பாசிடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் பாஸிடிவ் முனை 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும்  எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட் / 1.7 ஆம்பியர் கிடைக்கும்.

பாரலெல் (PARALLEL) இணைப்பு




மேலே குறிப்பிடப்பட்ட அதே பாட்டரிகள் பாரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு  1.5 V / 5.1 ஆம்பியர் மின்சாரம் கிடைக்கும்.

சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) மட்டுமே கூடுதலாகும். ஆம்பியர் அதிகரிக்காது.                                                                

பேரலில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) அதிகரிக்காது. ஆம்பியர் மட்டுமே அதிகரிக்கும்.
More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget