Pages

Wednesday, April 11, 2012

ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி


இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.  
இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திற்கு சென்று நீங்கள் ட்ராக் செய்ய விரும்பும் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயர் அல்லது குறிப்பிட்ட இரண்டு ரயில் நிலையங்களை குறிப்பிட்டால் போதும் அந்த ரயில் இருக்கும் இருப்பிடம், கடந்த இரு நிலையங்கள், அடுத்த இரு நிலையங்கள் போன்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில் தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம். 
இந்த தளத்திற்கு செல்ல - www.trainenquiry.com/searchtrain.aspx

No comments:

Post a Comment