Pages

Tuesday, April 17, 2012

உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects



கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின் புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும் பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.
இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். 
கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.
உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.
இந்த தளத்திற்கு செல்ல - Touch Effects

No comments:

Post a Comment