Pages

Friday, June 29, 2012

இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்



இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.


இது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.

ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம். 

source - ET

No comments:

Post a Comment