Pages

Thursday, August 2, 2012

6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள்!!





இணையம் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் அடையாளமாக இருப்பது மின்னஞ்சல்கள் ஆகும். கூகிள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவைகளை இலவசமாக (ஆனால் மறைமுக விலையுடன்) தருகின்றன. அவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹாட்மெயில் (Hotmail) என்ற பெயரில் வழங்கி வந்த மின்னஞ்சல் சேவையினை அவுட்லுக் (Outlook) என்ற புதிய பெயரில் வழங்குகிறது.

Outlook தளம் நேற்று அறிமுகமான ஆறு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் (பத்து லட்சம்) கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உடனே கணக்கு உருவாக்க முயலுங்கள். இல்லையென்றால் வேறு யாராவது பதிவு செய்துவிடுவார்கள்.

தள முகவரி: Outlook.com

இந்த புதிய தள வடிவமைப்பு எனக்கு பிடித்துள்ளது. ஆனால் மின்னஞ்சல் கணக்கை பேஸ்புக்கில் இணைப்பதற்கு பல்வேறு அனுமதிகள் கேட்கிறது. மற்றபடி பிரமாதமாக உள்ளது.

புகைப்படங்கள்:




வசதிகள்: 

  • பேஸ்புக், ட்விட்டர் கணக்குளை இணைக்கலாம்.
  • Word, Excel, Powerpoint கோப்புகளை மின்னஞ்சலிலேயே திறந்து பார்க்கலாம்.
  • ஸ்கைப் மென்பொருள் இல்லாமலேயே ஸ்கைப் வீடியோ சாட் செய்யலாம். (இந்த வசதி விரைவில் வரவுள்ளது)
  • மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை SlideShow-ஆக பார்க்கலாம்.
  • மைக்ரோசாப்டின் Skydrive மேகக்கணினி சேவை இணைந்துள்ளதால் மின்னஞ்சலில் வரம்பின்றி கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.

இன்னும்  பல வசதிகள் உள்ளன. விருப்பமிருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

No comments:

Post a Comment