Pages

Thursday, April 18, 2013

கணினியில் உள்ள இணையத்தை மொபைல்போனில் பகிர்ந்துகொள்ள



கணினியில் இருக்கும் இணையத்தை மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் கணினியிலும் மொபைல் போனிலும் Wifi வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கணினியில் உள்ள இணையத்தை நாம் எளிதாக மொபைல் போனில் இணைக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நெட்வோர்க் சேரிங்கை வைத்து இணைக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மூன்றாம்தர மென்பொருளின் உதவியுடன் இணைய இணைப்பினை மொபைல் போனுடன் இணைக்கும் போது எந்தவித பிரச்சினையும் இன்றி இணையம் இணைக்கப்படுகிறது.

முதலில் நம்முடைய கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும். ஈத்தர்நெட் இணைப்பு அல்லது டேட்டா கார்டு கொண்டு கணினியில் இணையத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். நான் ஈத்தர்நெட் வழியாக கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன். 

அடுத்து mhotspot என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கி கணினியில் நிறுவவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். 


தோன்றும் விண்டோவில் Hotspot Name என்பதில் Wifi பெயரை உள்ளிடவும், பின்  கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்து Share From என்பதில் நீங்கள் பகிர இருக்கும் நெட்வோர்க்கினை தேர்ந்தெடுக்கவும். நான் ஈத்தர்நெட் வழியாக இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன். எனவே Local Area Connection 2 என்பதை தெரிவு செய்துள்ளேன். நீங்கள் வேறு வழியில் கணினியுடன் இணையத்தை ஏற்படுத்தி இருந்தால் அதனை தெரிவு செய்து கொள்ளவும். அதிகபட்சமாக எத்தனை கணினி மற்றும் மொபைல் போனுடன் இந்த இணைய இணைப்பினை பகிர இருக்கிறீர்களோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Start Hotspot என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.


தற்போது முழுமையாக Hotspot உருவாக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு செய்தி வரும். 



அடுத்து டாஸ்க்பாரில் உள்ள இணைய இணைப்பு ஐகானை கிளிக் செய்து பாருங்கள் நீங்கள் உருவாக்கிய பெயரில் இணைய இணைப்பு பகிர்தலுக்கான ஐகான் உருவாக்கப்பட்டு இருக்கும். கணினியில் வேலை முடிந்து அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது மொபைல் போனில் தான்.

மொபைல் போனில் Wifi ஆன் செய்து விட்டு, Wifi இணைப்பு இருக்கிறதா என தேடிப்பாருங்கள் நீங்கள் உருவாக்கிய பெயரில் இணைய பகிர்தலுக்கான இணைப்பு வரும் அதை தேர்வு செய்யும் போது கடவுச்சொல் கேட்கும். நீங்கள் கணினியில் உள்ளிட்ட கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே செய்யவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது இணையம் மொபைல் போனில் இணைக்கப்பட்டுவிடும். 

கணினியில் உள்ள இணையத்தை கொண்டு ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் இணையத்தை இணைப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.

கணினியில் Wifi ஆன்செய்யவும். பின் மொபைல் போனில் Settings செல்லவும்.


பின் Wireless & networks என்பதை தெரிவு செய்யவும்.


பின் Wi-Fi ஆன் செய்யவும்.


பின் Wi-Settings செல்லவும். அதில் நீங்கள் கணினியில் உருவாக்கிய பெயரில் Wifi பகிர்தல் இணைப்பு தோன்றும். அதை தெரிவு செய்யவும்.


பின் கணினியில் இணைப்பு உருவாக்கும் போது உள்ளிட்ட கடவுச்சொல்லை இங்கு உள்ளிட்டு Connect  பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவுதான் இப்போது இணையம் மொபைல் போனில் இணைக்கப்பட்டு விடும்.





தற்போது நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் உள்ள உலாவியை பயன்படுத்தி இணைய பக்கங்களில் வலம் வர முடியும்.

No comments:

Post a Comment