Pages

Thursday, July 4, 2013

மொபைல் ஜாவா(JAVA) விளையாட்டுக்களை கனினியில் விளையாட


ஜாவா புரோகிராம் மொழி பிரபலமானது, இந்த மொழியினை பயன்படுத்தி விண்டோஸ் மற்றும் மொபைல் விளையாட்டுக்கள் அதிகமாக வெளியாகி உள்ளது. விண்டோஸ் இயங்குதள ஜாவா விளையாட்டுக்களை வழக்கம் போல் கணினியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே போன்று மொபைல் போன்களுக்கான ஜாவா விளையாட்டுக்களை ஜாவா இயங்குதளம் கொண்ட மொபைல் போனில் மட்டுமே நிறுவி பயன்படுத்த முடியும். அதற்கு பதிலாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஜாவா விளையாட்டுக்களை விளையாட முடியும் இதற்கு K Emulator என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.



மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும். பின் அன்ஜிப் செய்யவும். அன்ஜிப் செய்து பின் KEmulator அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். பின் தோன்றும் விண்டோவில் Midlet என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் பைல் மெனு பொத்தானில் Load jar .. என்பதை தெரிவு செய்து அடுத்து தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட ஜாவா விளையாட்டை தெரிவு செய்யவும்.


பின் வழக்கம் போல் நீங்கள் குறிப்பிட்ட ஜாவா விளையாட்டினை விளையாட முடியும். வேண்டுமெனில் வசதிகேற்ப கீகளை மாற்றி விளையாட்டினை விளையாடவும் வசதி உள்ளது.


இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். இந்த K Emulator மென்பொருளை பயன்படுத்தி எளிதாக ஜாவா விளையாட்டுக்களை கணினியில் விளையாட முடியும்.

No comments:

Post a Comment