/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Friday, June 29, 2012

ஜிமெயிலில் விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத விட்ஜெட்களை நீக்க!!!



இலவச மெயில் சேவையில் ஜிமெயிலை யாரும் அசைக்க முடியாது. மிகப்பயனுள்ள வசதிகளை கொண்டிருப்பதாலும் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதாலும் ஜிமெயிலை உலகம் முழுவதும் விரும்பி பயன்படுத்துகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல ஜிமெயிலை ஓபன் செய்தால் விளம்பரங்களும், விட்ஜெட்டுகளும் நிறைய காணப்படுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு ஜிமெயில் தோற்றம் பிடிக்க வில்லையா குறிப்பாக ஜிமெயிலில் உள்ள விளம்பர பேனர்கள் போன்று தேவையில்லாதவைகளை நீக்க வேண்டுமா? உங்களுக்காகவே ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது. 

முதலில் இந்த லிங்கில் சென்று Gmelius என்ற நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் இணைய உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். நீட்சியை இணைத்தவுடன் நீட்சியின் Options பகுதிக்கு சென்றால் கீழே உள்ளதை போல ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் ஜிமெயிலில் உங்களுக்கு வேண்டாதவைகளுக்கு நேராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள Save My Settings என்பதை அழுத்தி சேமித்து கொள்ளவும். 




இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்து பாருங்கள் நீங்கள் நீக்கிய பகுதி வந்திருக்காது. இந்த நீட்சியின் மூலம் Ads, People Widget, Chat, Chat availability, chat search box, calender widget போன்றவைகளை ஜிமெயிலில் இருந்து நீக்கலாம்.

 மற்றும் உங்கள் மெயிலுக்கு ஏதாவது அட்டாச்மென்ட் வந்தால் அதற்க்கு ஏற்ற ஐகானும் தெரியும். உதாரணமாக PDF பைலை அட்டாச் செய்து அனுப்பி இருந்தால் அந்த மெயிலில் சாதாரண அட்டாச்மென்ட் ஐகான் தெரியாமல் PDF ஐகான் தெரியும். இதன் மூலம் மெயிலை ஓபன் செய்யாமலே எந்த வகையான பைல் அட்டாச்மென்ட் வந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். மற்றும் மேலும் பல வசதிகள் இந்த நீட்சியில் உள்ளது.

இந்த நீட்சி தற்பொழுது குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஒபேரா உலவிகளில் வேலை செய்கிறது.


No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget