/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, July 3, 2013

OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?

OLX தளம் ஆன்லைன் மூலம் நாம் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். முன்பெல்லாம் பழைய பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்றால், கிடைக்கும் ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது, அதே போல விற்பதற்கும் சரியான விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் OLX வந்த பின் இரண்டின் வேலையும் எளிதாகி நமக்கு உகந்த விலையில் பொருளை வாங்கலாம் அல்லது விற்கலாம்.

OLX-IN-LOGO-1024x934



OLX மூலம் ஒரு பொருளை வாங்குதல் எளிது. குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு பொருளை பற்றி விசாரித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பதிவில் எப்படி ஒரு பொருளை விற்பது என்று பார்ப்போம்.
முதலில் olx.in என்ற தளத்திற்கு சென்று Register மூலம் ஒரு புதிய பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள். கணக்கை உறுதி செய்ய உங்கள் மின்னஞ்சலில் வரும் லிங்க் மீது கிளிக் செய்ய வேண்டும். இது முடிந்த பிறகு நீங்கள் OLX தளத்தில் Sign in செய்ய முடியும். Sign in செய்த பிறகு “Post a Free Ad” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் விற்க போகும் பொருள் என்ன Category என்று தெரிவு செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் நீங்கள் உங்கள் விளம்பரம் குறித்த தகவல்களை தர வேண்டும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
olx ad
தகவல்களை கொடுத்தவுடன்  Post என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் இந்த விளம்பரம் Pending Ad என்று வரும்.
இப்போது உங்கள் விளம்பரம் OLX Team மூலம் செக் செய்யப்பட்டு 3 முதல் 6 மணி நேரத்துக்குள் அனைவருக்கும் தெரியும்படி வந்து விடும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் உங்களுக்கு மின்னஞ்சல் வரும் அல்லது OLX தளத்தில் நுழைந்து My OLX என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் Settings பகுதிக்கு கீழே உங்கள் விளம்பரத்தின் நிலை தெரியும்.
OLX pending ad
விளம்பரம் Approve ஆகிவிட்டால் Active Ads பகுதியில் இருக்கும்.
olx active ad

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget