Pages

Monday, August 27, 2012

நான் எப்படி உன் வசமானேன் ?


 உறக்கம்  தொலைத்த 
இரவுகளில் 
உனக்கு ஒரு முக்கிய 
பங்கு உண்டு !

சந்தோசமோ  துக்கமோ 
உன்னிடம் சொல்வதற்காகவே 
காத்திருக்கிறது என் 
உதடுகள் ..

விழி மூடிதிறந்தால்
உன் பிம்பம் வராத நாட்களை 
விரல் விட்டு எண்ணி விடலாம் 

எங்கு பிறந்தாய் 
எங்கு வளர்ந்தாய் 
ஒன்றும் அறிந்ததில்லை 
இருபது வருடங்களாய்..
பிறகு எப்படி என்னை 
ஆட்சி செய்கிறாய் இப்படி ?

No comments:

Post a Comment