/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Tuesday, April 17, 2012

மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் போன்கள்!!!

சூப்பர் போன் காஸிப் என அழைக்கப்படும் மைக்ரோமேக்ஸ் ஏ78 மொபைல் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி யுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் போன், வழக்கம் போல இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைக் கையாளும் திறன் கொண்டது.

இந்த போன் பல சிறப்புகளைக் கொண்டது. தொட்டும், டைப் செய்தும் கட்டளைகளை நிறை வேற்றலாம். இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. கெபாசிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. அத்துடன் முழுமையான குவெர்ட்டி கீ போர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 650 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. இதன் கேமரா 3 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்குகிறது. எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, முன்புறம் 0.3 எம்.பி கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. 3ஜி, வை-பி, புளுடூத் 2, ஜி.பி.எஸ். ஆகிய நெட்வொர்க் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இந்த போனின் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் பேட்டரி 1300 mAh திறன் கொண்டது. பல சமூக வலைத்தளங்களுக்கு நேரடியாக இணைப்பு கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,990. இதனை இணைய தளங்கள் மூலம் இப்போதைக்குப் பெறலாம்.

இதனைத் தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அதன் இன்னொரு ஆண்ட்ராய்ட் மொபைல் போனை, மைக்ரோமேக்ஸ் ஏ 73 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் இரண்டு சிம் மற்றும் டச் ஸ்கிரீன் இயக்கம் கொண்டது. இதனை சூப்பர்போன் பஸ் என மைக்ரோமேக்ஸ் அழைக்கிறது.

3.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் தொடு திரை, ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 650 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 2 எம்.பி, கேமரா, 0.3 எம்பி திறனுடன் கூடிய முன் பக்க இரண்டாவது கேமரா, ஏ78 மொபைலில் தரப்பட்டுள்ள அனைத்து நெட்வொர்க் தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.

போனின் நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1300 mAh திறன் கொண்டது. சமூக இணைய தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,490.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget