Join Only-for-tamil

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். 

இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMSஎன்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.

அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.

Join Only-for-tamil

இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Windowஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம். 

Join Only-for-tamil

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.