/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, January 21, 2013

Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி?


சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் Babylon Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும் Firefox - இல் தான் இது add ஆகும். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம். 

முதலில் Firefox Add-ons பகுதியில் இருந்து Babylon Extension - ஐ நீக்கி விடுங்கள். 

வழி 1 : 
READ MORE

Firefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும். 


அவ்வளவு தான் இனி  Babylon Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும். 

வழி 2 : 

1. C:\Program Files\Mozilla Firefox\searchplugins என்பதில் babylon file - ஐ நீக்கி விடுங்கள். 

2. இப்போது Firefox - ஐ ஓபன் செய்து URL Bar- இல் about:config என்பதை தரவும். 

3. அதில் உள்ள Search பகுதியில் babylon என்பதை தரவும். இப்போது வரும் பகுதியில் keyword.url என்பதில் www.google.com என்பதை தரவும். 

மற்ற எதிலும் babylon என்று இருந்தால் "search the web (babylon)" என்பதை "search the web (google)" என்று மாற்றவும். 

அவ்வளவே இப்போது babylon உங்கள் Firefox- இல் இருந்து நீக்கப்பட்டு இருக்கும். 

மற்ற ப்ரௌசெர்களில் (குறிப்பாக Chrome) Extensions பகுதியில் இதை நீக்கி விட்டு, Home Page இல் உங்களுக்கு விருப்பமான பக்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget