/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, January 21, 2013

விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி?


Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 

இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது. 

1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால்

READ MORE
கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள். 



3. இப்போது வரும் விண்டோவில் நீங்கள் எந்த Drive - இல் OS இன்ஸ்டால் செய்ய போகிறீர்கள் என்பதோடு User Name, Password - ஐ குறிப்பிட வேண்டும். 


4. இப்போது இது 500MB அளவுக்கு டவுன்லோட் ஆகும். இதற்கு சில நிமிடங்கள் முதல் மணி நேரம் வரை ஆகலாம். உங்கள் இணைய வேகத்தை பொறுத்தது.ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் கணினியில் வேலைகளை செய்யலாம். 



5.இன்ஸ்டால் ஆன பிறகு நீங்கள் உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். 



6. Restart ஆனவுடன் கீழே உள்ளது போல வரும், இப்போது நீங்கள் Ubuntu - வை தெரிவு செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget