/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, January 9, 2013

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களின்/பேஜின் போஸ்ட்களை Notification ஆக பெறுவது எப்படி?



கூகுள் பிளஸ், ட்விட்டர் போன்றவைகளின் போட்டியை சமாளிக்க பேஸ்புக் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வந்துள்ள புது வசதி தான் ஒரு குறிப்பிட்ட நபர்அல்லது பேஸ்புக்க பேஜ்களின் அனைத்து போஸ்ட்களையும் Notification-இல் பெறுவது.

சில நபர்கள் அல்லது பேஸ்புக் பக்க பகிர்வுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும். நமக்கு அதிகமான நண்பர்கள் இருப்பின் குறிப்பிட்ட பதிவுகளை நாம் கவனிக்க மறந்து விடுவோம், இதுவே அந்த புதிய பதிவுகள் Notification - இல் வந்தால் நாம் கண்டிப்பாக பார்ப்போம். அதற்கு

READ MORE
உதவுவது தான் இந்த வசதி.  எப்படி என்று பார்ப்போம். 

இது கடந்த மாத ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தட்டது. ஆனால் இரண்டு நாட்களாகத்தான் எனக்கு வேலை செய்கிறது.

நண்பர்களின் பதிவுகளை Notification - இல் பெற: 

முதலில் குறிப்பிட்ட நண்பரின் Profile பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது கீழே உள்ளது போல Friends என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது அவர் புதியதாக போஸ்ட், போட்டோ எதைப் பகிர்ந்தாலும் உங்களுக்கு Notifications வரும். 


பேஸ்புக் பேஜ்களின் பதிவுகளை Notification - இல் பெற: 

முதலில் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது கீழே உள்ளது போல Liked என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இனி ஒவ்வொரு புதிய பகிர்வும் உங்களுக்கு Notification ஆக வரும். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget