/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Friday, October 19, 2012

ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?!!



மின்னஞ்சல் கணக்கு என்பது இணையத்தில் உலவும் அனைவருக்கும் மிக மிக அவசியமான ஒன்று.அதற்கு ஜிமெயில் நமக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பலவற்றின் அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதே ஜிமெயில் முழுவதையும் தமிழில் மாற்ற முடிந்தால்? 

இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். 

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு
வரவும்.

READ MORE


2.  இப்போது "General" Tab இல் இருப்பீர்கள். இதன் முதல் வசதியாக "Language" என்பது இருக்கும். 



3. இப்போது அதில் "Gmail display language" என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள். அடுத்து "Would you also like to make Tamil you language for other google sites " என்பதற்கு Yes or No கொடுத்து விட்டு  Scroll செய்து கீழே வந்து Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். 

இனி ஜிமெயில் முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கு மாறிவிடும். ஆங்காங்கே மிகச் சில ஆங்கில சொற்கள் இருந்தால் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்துமே தமிழ் அல்லது ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வார்த்தையில் இருக்கும். என்னுடைய ஜிமெயில் பக்கம் கீழே படத்தில் உள்ளது.



இனி உங்களுக்கு எளிதாக ஜிமெயிலை நீங்கள் உபயோகிக்க முடியும். 

4. இல்லை நான் ஜிமெயிலை ஆங்கிலத்தில் பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் எனக்கு அதில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் அதற்கான வசதி உள்ளது. 

5. மேலே Step - 2 இல் உள்ள படத்தில் "Show All Language Options" என்று உள்ளதல்லவா அதை கிளிக் செய்து, "Enable input tools" என்பதை கிளிக் செய்து செய்யுங்கள். இப்போது ஒரு சிறிய விண்டோ வந்து input tools என்ன இருக்கிறது என்று காட்டும். தமிழுக்கு மூன்று வகையான Tools உள்ளன. 


இதில் Unicode முறை வேண்டும் என்பவர்கள் முதலாவதாக உள்ள "தமிழ்" என்பதை பயன்படுத்தவும். Inscript Keyboard பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் இரண்டாவதையும், போனெடிக் முறைக்கு மூன்றாவதையும் பயன்படுத்தலாம்.  முன்பு Unicode முறை மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இப்போது மற்ற இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கும் இது உதவும்.

இப்போது OK கொடுத்து பின்னர் Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். 

இப்போது உங்கள் புதிய மின்னஞ்சலில் தமிழில்  தட்டச்சு செய்ய வலது மேல் புறம் Settings Icon க்கு அருகில் கீழே படத்தில் உள்ளது போல உள்ளத்தில் "த" என்பதை கிளிக் செய்து விட்டு தட்டச்சு செய்யலாம். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget