/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Friday, October 19, 2012

ஜிமெயிலில் ஐகான்களை Text ஆக மாற்றுவது எப்படி?!!


இன்றைக்கு இணையத்தில் ஜிமெயிலை பயன்படுத்தாதவரே இல்லை எனலாம். நிறைய வசதிகளை தரும் ஜிமெயில், பல மாற்றங்களை செய்து வருகிறது,பல வசதியாய் இருப்பினும் அதில் சில நமக்கு இடைஞ்சலாய் அமையும்.

புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive,  Spam, Delete ,  போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் . கீழே படத்தில் உள்ளது போல.

READ MORE


இது சிலருக்கு வசதியாக இருக்கலாம் , ஆனால் அவசர கதியில் மெயில் செக் செய்கிறவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு தலைவலியாகவே இருக்கிறது !

இவை பெயர் வடிவிலே இருந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? சரி அதை எப்படி மாற்றுவது என பார்ப்போம் வாருங்கள் . 

முதலில் செட்டிங்க்ஸ் க்குள் போகவேண்டும் , உங்கள் மெயில் இன் வலது மூலையில் இருக்கும் Settings ஐ கிளிக் செய்யவும்.


பின்பு அதிலிருக்கும் General ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதில் Button Labels என்ற வசதியில் Icons என்பது தெரிவாகி இருக்கும் அதில் இப்போது நீங்கள் Text என்று தெரிவு செய்ய வேண்டும். 




இப்போது Save செய்து விடுங்கள். இனி உங்கள் Tool Bar-இல் உங்களுக்கு எல்லாமே Text ஆக கீழே படத்தில் உள்ளது போல காட்சியளிக்கும். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget