/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, July 9, 2012

ஐடியா வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்



ஐ.டி 918 என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை ஐடியா செல்லுலர் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரண்டு சிம்களை இயக்கக் கூடிய 3ஜி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும்.

480 x 800 பிக்ஸெல் திறனுடன் கூடிய 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இதில் இயங்குகிறது.

3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.

எப்.எம். ரேடியோ, 150 எம்.பி. கொள்ளளவிலான நினைவகம், 512 எம்பி ராம் நினைவகம், 256 எம்பி யில் மாறா நினைவகம், நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 7.2 Mbps திறனில் 3G HSDPA DL, புளுடூத், வைபி, சமூக வலை இணையத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்றவற்றிற்கு இணைப்பு, பதிந்தே தரப்படும் கூகுள் மற்றும் யுட்யூப் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த போனில் தரப்பட்டுள்ள 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, பயமின்றி அதிக நாள் போனைப் பயன்படுத்தும் நம்பிக்கையைத் தருகிறது.

அறிமுக சலுகையாக, ரூ.2,300 மதிப்புள்ள டேட்டா சேவை வழங்கப்படுகிறது. அத்துடன் மூன்று மாதங்களுக்கு இலவச டிவி வசதி வழங்கப்படுகிறது.

2 ஜிபி அளவிலான டேட்டா மூன்று மாதங்களுக்கு இலவசம். முதல் மூன்று மாதங்களுக்கு தினந்தோறும் 10 நிமிடங்கள் இலவசமாகப் பேசிக்கொள்ளும் சலுகையும் உண்டு. ஐ.டி 918 போனின் அதிக பட்ச விலை ரூ. 5,994 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து பெரிய, சிறிய நகரங்களில் இயங்கும் ஐடியா விற்பனை மையங்களில் இதனை வாங்கலாம்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget