/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Sunday, July 22, 2012

இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்




கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று நம்மிடம் பணம் இல்லாத நேரத்திலும் ஏதேனும் முக்கியமான பொருள் வாங்க வேண்டி இருந்தால் அக்கம் பக்கம் கடன் கேட்டு அலைய வேண்டியதில்லை.  கிரெடிட் கார்ட் இருந்தால் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும். மற்றும் ஏராளமான பயன்களை கிரெடிட் கார்ட்கள் வழங்குகிறது.


கிரெடிட் கார்ட் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கிரெடிட் கார்ட் வாங்க அனைத்து தகுதிகள் இருந்தாலும் அப்ப்ளிகேஷன் கொடுத்து அப்ரூவலுக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். (எனக்கு Barclays bank கார்ட் வர இரண்டு மாதம் ஆச்சு). ஆனால் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் அப்படி இல்லை ஆன்லைனில் கிரடிட் கார்ட் அப்ளை செய்து அதற்கான அப்ப்ரூவலையும் உடனே பெற்று கொள்ளலாம்.


இப்பொழுது இந்தியாவிலும் இந்த திட்டம் வர இருக்கிறது. பிரபல வங்கியான  Standard Chartered Bank முதன் முதலில் அறிமுக படுத்த இருக்கிறது. இனி கிரெடிட் கார்ட்களை ஆன்லைனில் அப்ளை செய்வது மட்டுமின்றி அப்ரூவலையும் சில நிமிடங்களிலேயே பெற முடியும். அதற்க்கான வழிமுறைகளை கீழே காண்போம்.


ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி: 

இந்த வசதியை உபயோகிக்க முதலில் Standard Chartered Bank இந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான கார்டை தேர்வு செய்து அதற்க்கு கீழே இருக்கும் Apply Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். 


அடுத்து அதற்க்காக கொடுக்கப்படும் படிவத்தை உங்களின் சரியாக விவரங்களுடன் பூர்த்தி செய்து Proceed கொடுத்தால் போதும். அடுத்த சில நிமிடங்களின் உங்களின் கிரெடிட் கார்ட் அப்ரூவல் செய்தியை ஆன்லைனில் பார்த்து கொள்ளலாம்.  உங்களின் கிரெடிட் கார்ட் அப்ரூவல் ஆகிவிட்டால் அந்த வங்கியில் நபர்கள் உங்களை அணுகி உங்களின் சான்றிதழ்களை பெற்று கொள்வார்கள்.

அந்த சான்றிதழ்களை உங்கள் வங்கிக்கு அனுப்பி உங்களின் கடைசி கட்ட அனுமதியையும் வழங்கி விடுவார்கள். இந்த லிங்கில் application statusசென்று உங்களின் விவரங்களை கொடுத்தால் உங்களின் கிரெடிட் கார்ட் செயல்கள் எந்த நிலையில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். 

இனி எந்த கால விரையமுமின்றி கிரெடிட் கார்ட்களை ஆன்லைனில் அப்ளை செய்து பெற்று கொள்ளலாம். கிரெடிட் கார்டில் எந்த அளவு பயன் உள்ளதோ அதை விட இரு மடங்கு ஆபத்தும் உள்ளது. சரியாக பணம் கட்ட தவறினால் மீட்டர் வட்டி கணக்கில் உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள். கவனமாக இருக்கவும்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget