/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Sunday, July 22, 2012

யூட்யூபில் முகத்தை மறைக்கலாம்





நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற்கு தான். இது வரை பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் வீடியோவை யூட்யூபில் அப்லோட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் வசதி இருக்கும் அல்லவா? அதில் Enhancement என்பதை கிளிக் செய்தால் பின்வருமாறு வரும்.


அதில் வீடியோவிற்கு கீழே Additional Features என்பதை கிளிக் செய்தால் Blur All Faces என்று காட்டும். அதில் Apply என்பதை க்ளிக் செய்தால் வீடியோவில் உள்ள முகங்கள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட வீடியோவின் Preview-ஐயும் பார்க்கலாம்.

பிறகு மேலே Save As என்பதை கிளிக் செய்தால், முகங்கள் மறைக்கப்பட்ட வீடியோ தனியாக உருவாக்கப்படும். Save என்பதை கிளிக் செய்தால் அதே வீடியோ மாற்றப்படும்.

மேலும் வீடியோவின் தரத்தை பொறுத்து, சில நேரங்களில் வேலை செய்யாமல் இருக்கலாம் என்றும் யூட்யூப் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget