/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, February 2, 2013

டுவிட்டரின் 250 மில்லியன் அக்கவுண்டுக்களை திருடிய ஹேக்கர்ஸ்!!


டுவிட்டரின் 250 மில்லியன் அக்கவுண்டுக்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஹேக்கர்கள் குறித்த டுவிட்டர் பாவணையாளர்களின் மின்னஞ்சல், கடவுச்சொல் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாகவும், இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மின்னஞ்சல்களுக்கு

READ MORE
புதிய கடவுச்சொற்களை உருவாக்கும் அனுமதியை வழங்கி மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், இவ்வாறு டுவிட்டர் அக்கவுண்டுக்களை ஹேக்கிங் செய்யும் நடவடிக்கை இணங்காணப்பட்டதாகவும், எனினும் ஹேக்கிங் செய்யப்பட்டு டுவிட்டர் செயழிலந்த பின்னரே இவ்வாறு இணங்காணப்பட்டிருந்ததாகவும் டுவிட்டர் நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இது ஒரு நவீனமயப்படுத்தப்பட்ட, கூட்டு முயற்சி எனவும், இந்த ஹேக்கர்களை கண்டுபிடிக்க அமெரிக்க அரசுக்கு உதவப்போவதாகவும் இதன் மூலம் ஏனைய இணைய பாவணையாளர்களை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
த நியூயோர்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் ஆகிய ஊடக நிறுவனங்களின் கணணிகளும் கடந்த வாரம் சீன வல்லுனர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget