/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, March 31, 2012

விண்டோஸ் 8 - புதிய தகவல்கள்


தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.

அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.

புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.

அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.

"கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில்

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்


வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.

பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.

குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.

இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த

எந்த இடத்திலும் இன்டர்நெட்


இன்டர்நெட் இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர்.

சற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்ட ரில் உள்ள நெட்வொர்க் இணைப்பினைச் சிரமப்படுத்த வேண்டியதில்லை.

இது போன்ற இன்டர்நெட் இணைப்புகளால், நாம் அலுவல் காரணமாக வெளியூர்களுக்குச் செல்கையில் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அல்லது நம் லேப்டாப்பில் இந்த டேட்டா கார்ட்களை இணைத்துப் பயன்படுத்த முடிகிறது.

இருந்தாலும், சில வேளைகளிலும் இவையும் நம் காலை வாரிவிடுகின்றன. இணைப்பு தராமல்,ஏதாவது ஒரு எர்ரர் குறியீட்டினைக் காட்டிவிட்டு, தொடர முடியாமல் உறைந்துவிடுகின்றன. இதனால் நம் வேலைகள் தடை படுகின்றன.

இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.


1. மொபைல் இன்டர்நெட்டுக்கு ஒரே நிறுவனமா?

எப்போதும் இன்டர்நெட் இணைப்பு பெற, குறிப்பாக, நாம் செல்லும் இடங்களில் எல்லாம் இன்டர்நெட் இணைப்பு பெற, ஒரே நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கார்ட் அல்லது அட்டையை நம்ப வேண்டாம். நீங்கள் வாங்கியுள்ள இணைப்பு ட்ரைவினைத் தந்த நிறுவனத்தின் இன்டர்நெட் தொடர்பு, நீங்கள் வசிக்கும் நகரில் நல்ல வேகத்தில் கிடைக்கலாம்.

ஆனால், மற்ற நகரங்களில் அந்த நிறுவனத்தின் டவர்கள் சரியான திறன் கொண்டு இயங்காததால், வேகத்தில் தடைபடலாம். சென்னையில் சரியாக இயங்கும் ஒரு நெட்வொர்க் கார்ட், டில்லியில் அல்லது மதுரையில் பாதி அளவு மட்டுமே வேகம் தரலாம்;

அல்லது அந்த நகரிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போனால், இயங்காமலேயே இருக்கலாம். எனவே ஒன்றுக்கு இரண்டாக நெட்வொர்க் கார்டுகளை, வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.


2.குறைந்த வேக மொபைல் இன்டர்நெட் இணைப்பு:

உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்து பவர்களுக்கு வித்தியாசமான பிரச்னை உண்டாகலாம். உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பிற்கான ஐகானில் ஐந்து கட்டங்களும் நிறைவு பெற்று, சிக்னல் மிக ஸ்ட்ராங்காக இருப்பதாகக் காட்டப்படலாம்.

ஆனால் டேட்டா மிக மெதுவாக, நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கிடைக்கும். இதில் என்ன சிக்கல் என்றால், உங்கள் மொபைல் போனுக்கும் அருகில் உள்ள அதன் டவருக்கும் சிக்னல் பரிமாற்றம் மிக வேகமாக உள்ளது.

ஆனால் அந்த சிக்னல் டவரினை அதிகம் பேர் பயன்படுத்துவதால், டேட்டா மிக மெதுவாகக் கிடைக்கிறது. எனவே உடனே இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்றால், உங்கள் இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில், சிக்னல் பரிமாற்றம் மிக மோசமாக இருக்கும்; ஆனால் டேட்டா வரத்து வேகமாக இருக்கும். இதற்குக் காரணம், உங்கள் சிக்னல் டவரைக் குறைந்த இணைப்புகளே பயன்படுத்துவதால் தான்.


3. விடுதிகளில் வை-பி:

பல சாதாரண விடுதிகள் கூட, இப்போதெல்லாம் அவர்கள் விடுதி முழுவதையும் வை-பி செய்திருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். தங்கும் அனைவரும் இன்டர்நெட் இணைப்பு வேண்டுவதால், இந்த வசதி தரும் விடுதிகளுக்கு முன்னுரிமை தருகின்றனர்.

அங்கு போன பின்னரே, நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அந்த வை-பி வேலை செய்திடவில்லை என்பது. எனவே, நாமே நம்முடைய வை-பி ரௌட்டரைக் கொண்டு செல்ல வேண்டும். ஈதர்நெட் இணைப்பினை

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?


எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது.

இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.

இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாகwww.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும்.

இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.

முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.

இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது.

ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு.

ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன?


இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது.

கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. இணையம் இவ்வாறு பலமுனைகளில் வளர்ந்ததனால் தான், இன்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இணையத்தைச் சார்ந்தே உள்ளன.

இணையத்தின் ஊடாகச் செல்லும் இணைப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையன. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத் தில் இணைப்பு கொண்ட இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்கையில் ஏற்படும் டேட்டா பரிமாற்றம், பல லட்சம் இணைப்பு வழிகளில் ஒன்றில் மேற்கொள்ளப்படுகிறது.

நீங்கள் ஒரு பைலை டவுண்லோட் செய்கையில், இணையம் வழியே அது பல தகவல் பொட்டலங்களாகப் பயணம் செய்து உங்களை அடைகிறது. இந்த தகவல் பொட்டலங்கள் ஒரே வழியில் மட்டுமே பயணிப்பதில்லை. பல வழிகளை மேற்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழியில், ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டால், உடனே மாற்று வழியில் தகவல் பயணம் மேற்கொள்ளப்படும்.

இதனால் தான், நாம் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் பல செயல்பாடுகளை ஈடேற்றி வருகிறோம். இயற்கை அழிவினாலோ, அணுக்கதிர் தாக்கத்தினாலோ, இணையத் தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பகுதியின் மூலம் இணையம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அழிக்கப்படும் பகுதியில் உள்ள டேட்டா ஒருவேளை மீட்கப்படாத அளவில் அழியலாம்; ஆனால் இணையம் உயிரோடு தான் இயங்கும்.

இணையத்தை மொத்தமாக அழிக்கும் வகையிலான சூழ்நிலைகளை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாது. இருந்தாலும் அப்படி ஒரு வேளை இணையம் அழியும் என்றால், என்ன என்ன விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய திருக்கும்? நம் வாழ்வு,நாம் இணையத்திற்கு முன்னால் கொண்டிருந்த தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மீண்டும் தொடருமா? என்பதே இன்றைய சிந்தனைப் போக்காக அமைகிறது.

இணையம் இல்லாத வாழ்க்கை நமக்கு மிகவும் விநோதமாகத்தான் இருக்கும். மொபைல் போன் சேவை, அதன் மூலம் கிடைக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாற்றம் எல்லாம் என்னவாகும்? கேபிள் வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கும் என்றாலும், இணையம் சார்ந்த சாட்டலைட் வழி கிடைத்த தொடர்பு அறுந்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்காதே?

பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பழங்கதை ஆகிவிடும். மீண்டும் ""அன்புள்ள அண்ணனுக்கு'' என போஸ்ட் கார்டில் பணம் கேட்டு எழுத வேண்டி இருக்கும். நம் நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உடனுடக்குடன் அறிய முடியாது. சீமந்தம் குறித்த செய்தி கிடைக்கும் போது அங்கு குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கலாம்.

கம்ப்யூட்டர்களில் பைல்களை ஸ்டோர் செய்திடலாம். ஆனால், தொலைவில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எவ்வளவு நீளத்திற்கு கேபிள் இணைப்பு கொடுக்க முடியும்? கிரிட் கம்ப்யூட்டிங் முறையெல்லாம் இல்லாமல் போய், குழப்பமான கணக்கீடுகள் எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் போய், அறிவியல் ஆய்வுகள் தாமதமாகலாம்.

இணையம் இல்லாமல் போனால், பொருளாதாரச் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டும். எலக்ட்ரானிக் பேங்கிங் மறைந்து போய், செக்குகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். கூகுள் அல்லது அமேசான் போன்ற இன்டர்நெட் நிறுவனங்கள், சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும்.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் வர்த்தக இலக்குகளை கனவுகளாக எண்ணி அமைதியடைய வேண்டி வரும். கோடிக்கணக்கில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துவிடுவார்கள். பல கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் இயங்கும் எல்லை தெரியாமல்

ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் பயனுள்ள அப்ளிகேசன்!!!


ஆங்கிலம் பேசுவதற்கு என்று தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவேண்டாம் இருக்கும் இடத்தில் இருந்தே நம்முடைய ஆண்ட்ராய்டு போன் உதவியுடன் புதிதாக வந்திருக்கும் அப்ளிகேசனை கொண்டு எளிதாக ஸ்போக்கன் இங்கிலிஸ் ஆங்கிலப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கிலப்பயிற்சி ஆண்ட்ராய்டு மொபைல் போன் அப்ளிகேசன் உதவியுடன் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மூலம் எக்ஸ்பர்ட் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த அப்ளிகேசன் உள்ளது.
தரவிரக்க முகவரி : https://market.android.com/details?id=com.speakingpal.speechtrainer.sp

நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு


 
தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!
Join Only-for-tamil

1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

Join Only-for-tamil

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – “Bite into an Apple” என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் “Think Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

Join Only-for-tamil

3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Googol” என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு “Google” என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் “Google”" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
Join Only-for-tamil

4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

Join Only-for-tamil

5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை “Moore Noyce” என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது

Friday, March 30, 2012

புரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்!!!

எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

இவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.

இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைய தள முகவரிwww.codeacademy.com

இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.

நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம்,

THINK ...... THINK.....

உங்கள் ஜிமெயில் கணக்கை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்



ஜிமெயில் கணக்கை மற்றவங்க களவு எடுக்காம இருக்க நாங்க என்ன தான் செய்கிறது என்று நினைப்பீர்கள். அதற்கான விடையை ஜிமெயில் உங்களுக்கு தருகின்றது. வாருங்கள் பார்போம் உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்போம் என்று.

காதலியுடன் சுற்றும் பேஸ்புக் நிறுவனரின் பிரத்தியேக படங்கள் இணைப்பு!



பில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியான இவர் மிகச் சாதாரணமாக தனது பெண் தோழியுடன் சீனத் தெருவொன்றில் சுற்றுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

மிகச் சாதாரணமாக உடை அணிந்து உள்ளூர்க் காதலர்கள் போல நடமாடும் இவர்களை ஒரு புகைப்பட நிரூபர் இவர்களுக்குத் தெரியாமலே புகைப்படம் எடுத்துள்ளார். இன்று சமூக ஊடகங்களிலேயே ராஜாவாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவனரான Mark Zuckerberg உம் அவரது காதலியான Priscilla Chan உம் ஜோடியாகச் சுற்றும் காட்சிகளே இவை.

காதலியான Priscilla Chan சீனா -அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவர் . நேற்று மதியம் சீனாவின் Fuxing வீதியில் உள்ள நிதி வர்த்தக மையத்தில் தான் மேற்படி ஜோடிகள் இருவரும் காணப்பட்டார்கள். பேஸ்புக்கை தற்போது உலகெங்கிலும் இருந்து 845 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. காதலர்களாக உள்ள இருவரும் எட்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான Harvard இல் கல்வி பயின்றவர்கள். அந்த நேரத்தில் இருவரும் சாதாரண மாணவர்கள் தான். ஆனால் பேஸ்புக்கின் நிறுவனர் தற்போது இளவயதில் கோடீஸ்வரராக உள்ள பெருமையைப் பெற்றுள்ளார்.



WORLD'S LARGEST HELICOPTER...




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The Hotelicopter is modeled on the Soviet made Mil V-12, of which there were only two prototypes ever made. The Hotelicopter Company purchased one of these prototypes from the Mikhail Leontyevich Mil Heliicopter plant in Panki-Tomilino , Russia in 2004 and have been engineering the world's first flying hotel ever since. 

"The Hotelicopter features 18 luxuriously-appointed rooms for adrenaline junkies seeking a truly unique and memorable travel experience. Each soundproofed room is equipped with a queen-sized bed, fine linens, a mini-bar, coffee machine, wireless internet access, and all the luxurious appointments you'd expect from a flying five star hotel.Room service is available one hour after liftoff and prior to landing." The Hotelicopter is due to fly maiden journey this summer (June 26th) with an undisclosed price.
  • Dimensions Length:............................... 42 m (137 ft) 
  • Height:........................................... 28m (91 ft) 
  • Maximum Takeoff Weight.......... 105850 kg (232,870 lb) 
  • Maximum speed:....................... 255 km/h (137 kt) (158 miles/h) 
  • Cruising speed:.......................... 237 km/h (127 kt) (147 miles/h) 
  • Original Mi Range:................... 515 km (320 mi) 
  • Our augmented Mi Range -...... 1,296 km (700 mi)






மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......




 மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக........!!

 

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget