/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, March 15, 2012

ஒரே Software மூலம் எல்லா Fileகளையும் ஓபன் செய்ய முடியுமா?


Image Credit: 123rf.com

ஒரே ஒரு மென்பொருள் கொண்டு நாம் அடிக்கடி பயன்படுத்தும் File Format களை ஓபன் செய்ய முடியுமா? Open Freely என்ற மென்பொருள் இதற்கு உதவுகிறது. வெறும் 2MB மட்டுமே உள்ள இந்த மென்பொருள் கிட்டத்தட்ட நிறைய வேலைகளை நமக்கு எளிதாக்கும்.ஏன் இதை பயன்படுத்த வேண்டும்?  எப்படி இதை பயன்படுத்துவது? என்று பார்ப்போமா? 

முதலில் எதற்கு இதை பயன்படுத்த வேண்டும்? 
சில சமயங்களில் நண்பரின் கணினியில் ஒரு File ஐ நீங்கள் ஓபன் செய்ய முயற்சி செய்வீர்கள். ஆனால் குறிப்பட்ட மென்பொருள் இல்லாமல் அதை ஓபன் செய்ய முடியாது. உதாரணமாக MS-Office இல்லாமல் Word, PPT, Excel போன்றவற்றை ஓபன் செய்ய முடியாது. இணைய இணைப்பு இருந்தாலும் அவசரமாக தரவிறக்கம் செய்ய முடியாது. இதே போல PDF File களுக்கும். இது போன்றவற்றை ஒரே ஒரு மூலம் திறக்க முடியும் என்றால் நன்மை தானே. அதற்குதான் Open Freely பயன்படுத்த வேண்டும்.

இது கிட்டத்தட்ட கிட்டத்தட்ட நூறு வகையான File Format களை சப்போர்ட் செய்கிறது என்ன என்ன File-கள் சப்போர்ட் ஆகும் என்று இங்கு பார்த்துக் கொள்ளவும் . கிட்ட தட்ட நாம் அடிக்கடி பயன்படுத்தும் எல்லா வகையும் இதில் உள்ளது.

1. முதலில் இங்கே கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

2. எப்போதெல்லாம் ஒரு File ஐ ஓபன் செய்ய முடியவில்லையோ அப்போது இந்த Open Freely ஐ திறந்து Browse கட்டளை மூலம் குறிப்பிட்ட File ஐ திறக்க இயலும்.

3. இதன் சிறப்பம்சம்கள்


  • MS-Office File எளிதாக எடிட் செய்ய முடியும். Word, PPT, மற்றும் Excel போன்றவை.  
  • இதை நாம் வீடியோ பிளேயர் ஆகவும் பயன்படுத்தலாம்
  • நேரடியாக ஒரு Fileஐ ஓபன் செய்து, அதை பிரிண்ட் கொடுக்கலாம்.
  • ZIP, RAR Fileகளை ஓபன் செய்வதோடு மட்டும் இன்றி புதிய Zip, Rar மற்றும் இன்னும் பல File Compression & Decompression செய்யலாம். 

உதாரண File-கள்
Word File
Image File
Video File
Dll File

என்ன நண்பர்களே இதை எப்போதும் உங்கள் Pen Drive இல் வைத்துக் கொள்வது நல்லது தானே?

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget