/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, March 19, 2012

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்!!

பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளைCompress செய்துபயன்படுத்துவோம்.

இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.

மென்பொருளின் பெயர்: KGB Archiver

இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.

இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.

compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.

குறிப்பு: இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதேமென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானதுஉங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.

மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால்இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.

அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும்நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

1 comment:

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget