/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, March 24, 2012

கூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி?



கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. எந்த தளம், என்ன மாதிரியான தளம் என்பதை எல்லாம் பார்க்காமல் நாம் தேடுவதை மட்டும் எங்கிருந்தும் எடுத்து தரும். அப்படி தேடுதலில், பாதுகாப்பாய் நல்ல தகவல்களை மட்டும் எப்படி தேடுவது?


நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம்.
நீங்களே விரும்பாத தளங்கள், சொற்களின் பயன்பாட்டால், தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம். விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா?
அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:
கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச் சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள்.
அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!
வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!
தேர்வு செய்த பின்னர், விருப்பங்களைச் சேமிக்க மறவாதீர்கள்!!
ஒவ்வொரு நிலைக்கும் என்ன வேறுபாடு?
Strict filtering - வெளிப்படையான (sexually explicit) பாலின பக்கங்கள் அனைத்தையும், அதற்கு செல்லும் வழிகளைக் கொண்ட பக்கங்களையும் (links) தவிர்க்கும்
Moderate filtering - வெளிப்படையான பாலின பக்கங்கள் அனைத்தையும் தவிர்க்கும். வழிகள் தவிர்க்கப்படாது.
[இது தான் இயல்பிருப்பு (default) நிலையாகும்]
No filtering : எந்த தடையும் இல்ல. எல்லா விதமான பக்கங்களையும் காட்டும்.
எல்லா இடங்களிலும் செய்வது எப்படி?
நீங்கள் உங்கள் கூகிள் கணக்கைக் கொண்டு பல கணிணிகளில் வேலை செய்ய வேண்டி இருக்கலாம். எல்லா கணிணிகளிலும் இதனைச் செய்வது இயலாத காரியம். நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து தேடும் போது, எந்த கணிணியிலும் அதனைச் செயல்படுத்த வழி உண்டு.
SafeSearch Filtering பகுதியில் "Lock Safe Search" என்று ஒரு இடம் உள்ளது. அதனைச் சொடுக்குங்கள்..
இதன்பின், நீங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து தேடினால், நீங்கள் தேர்ந்தெடுத்த அதே அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கும்.
தமிழ் வழித்தேடலிற்கு

மேற்கூறப்பட்ட வழி ஆங்கில வழி தேடலிற்கு (English Search) மட்டுமே பயன்படும். தமிழ் வழி தேடல் வைத்து இருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
நீங்கள் தமிழில் கூகிள் பயன்படுத்துபவராக இருந்தால், மொழிமாற்றம் செய்து ஆங்கில மொழிக்குச் செல்லுங்கள். பிறகு மீண்டும் தமிழிற்கு மாறிக் கொள்ளுங்கள். இனி தொடருங்கள் !!!
நீங்கள் பாதுகாக்கப்பட்ட தேடலைத் (SafeSearch Filtering) துவங்கிய பிறகும், சில தகாத வலைத்தளங்களை தேடலில் காண வாய்ப்பு உண்டு..

சில உதாரணங்கள்:
  • தமிழ் என்று தேடிப் பாருங்கள்... முதலில் வரும் பதில் உங்களைத் திகைக்க வைக்கும்.
  • தமிழ் மொழியின் உறவுகள் பெயரைத் தேடிப் பாருங்கள். கிடைக்கும் பதில்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கும்

மேலே கூறப்பட்ட செய்திகள் Moderate Filter மட்டும் அல்ல.. Strict Filter முறையிலும் வரும் என்பது தான் சோகமான செய்தி!!

பதில்களில் வரும் "அது" போன்ற வலைத்தளங்கள் மிக கேவலமானவை. அவற்றை எழுதி பிறரைக் குறி வைப்பவர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கு அற்றவர்கள்.

சில குறிசொற்களைக் கொண்டு வடிப்பானை (Filter) ஏமாற்றி வந்து விடுகிறன...

இவற்றைக் குழந்தைகள் காண நேர்ந்தால் என்ன ஆகும்?

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget