/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, September 8, 2012

Android Lost - உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க !!



     
                                                                    
பெரும்பாலும் நாம் வாங்கும் ஆன்ட்ராய்ட் போன்கள் ரூபாய் 8000 என்ற அளவில் இருந்து தெரிவு செய்வோம். அதற்கும் குறைவாக கூட கிடைக்கிறது. ஆனால் நல்ல Specification என்று பார்க்கும் போது நாம் விலை உயர்ந்த ஒன்றை தான் தெரிவு செய்து வாங்குகிறோம். அவ்வளவு போட்டு வாங்கிய பின் அதை தொலைத்து விட்டால்? உங்கள் போன் போவது மட்டுமின்றி, உங்கள் அனைத்து ரகசியங்களும் திருடியவன் கைக்கு சென்று விடும். 

அப்படி தொலைந்து போனால் அதை எப்படி திரும்ப கண்டுபிடிப்பது, அதை இணையத்தில் இருந்து கண்ட்ரோல் செய்வது என்பதற்கு உதவுகிறது Android Lost. 

முதலில் இதை நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் http://www.androidlost.com/ என்ற அவர்கள் தளத்தில் உங்கள் கூகுள் கணக்கின் மூலம் நுழைந்து தகவல்களை தர வேண்டும். 

அதில் பல தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். பொறுமையாய் படித்து ஒவ்வோட்ரையும் புரிந்து கொண்டு அதை நிரப்பவும். 

  • Basic
  • Status
  • Messages
  • Security
  • MobilePremium
இந்த ஐந்து பகுதிகளும் தான் நீங்கள் நிரப்ப வேண்டியது. 

அடுத்து உங்கள் போனில் 

Settings >> Location & Security >>Select Device Administrator என்பதில் இதை Device Administrator ஆக தெரிவு செய்து விடவும். 

முடிந்தது வேலை. இனி உங்கள் போன் தொலைந்து போனால் இதில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய இயலும். 

நான் அவற்றை இது வரை செய்து பார்த்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை சிம் கார்டு மாற்றும் போதும் நான் தந்துள்ள நண்பரின் அலைபேசிக்கு என்னுடைய புதிய Sim Card நம்பர் மெசேஜ் ஆக சென்று விடும். (balance இருந்தால் மட்டும்) . இது ஒன்றே உங்கள் அலைபேசியை கண்டுபிடிக்க போதும். இதை Activate செய்ய http://www.androidlost.com/ - இல் SMS என்ற மெயின் menu வில் SMS Allow என்ற பகுதியில் நீங்கள் செய்யலாம். இந்தியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வசதி. 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget