/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, September 8, 2012

ஹேக் செய்யப்பட்ட ஜிமெயில்/கூகுள்(recovery)






தகவல் தொடர்புக்கு அதிகம் பயன்படும் மின்னஞ்சல்கள் நம்முடைய பெரும்பாலான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அவைகள் எந்நேரமும் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களால் களவாடப்படலாம்.  தற்போது ஹேக் செய்யப்பட ஜிமெயில்/கூகுள் கணக்கை மீளப்பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.

நமது ஜிமெயில் கணக்கு திருடப்பட்டால், அல்லது கடவுச்சொல் மறந்துவிட்டால் அதனை மீளப்பெறுவதற்கு அதிகமான வழிகளைத் தருகிறது கூகுள்.

https://www.google.com/settings/ என்ற முகவரிக்கு சென்றால் பின்வருமாறு இருக்கும்.


அதில் Change Password என்பது உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவதற்கான தேர்வாகும். குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள்.

Change recovery options என்பது தான் நமது கணக்கை மீளப்பெறுவதற்கு நாம் செய்யப் போகும் முன்னேற்பாடுகள். இதனை சொடுக்குங்கள்.

சொடுக்கியப்  பின் உங்கள் கடவுச்சொல்லை திரும்பக் கொடுக்க சொல்லும். அப்படி கொடுத்ததும் உங்களுக்கு Mobile Phone, Email, Security Question என மூன்று வழிகளைத் தரும்.

Mobile Phone:


 Add Phone என்பதை சொடுக்கி உங்கள்  மொபைல் எண்ணை பதிவு செய்வது முதல் வழியாகும். உங்களுக்கு கடவுச்சொல் மறந்துவிட்டாலோ, அல்லது கணக்கு திருடப்பட்டாலோ உங்கள் கோரிக்கைக்கு பிறகு அந்த மொபைல் எண்ணிற்கு Verification Code அனுப்புவார்கள். அதன் மூலம் நமது கணக்கிற்குள் நுழையலாம்.

Email:


நீங்கள் வேறு ஏதாவது மின்னஞ்சல்கள் வைத்திருந்தால் Add recovery email address என்பதை சொடுக்கி அந்த மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும். உங்களுக்கு கடவுச்சொல் மறந்துவிட்டாலோ, அல்லது கணக்கு திருடப்பட்டாலோ உங்கள் கோரிக்கைக்கு பிறகு அந்த மின்னஞ்சல் முகவரிக்கு Verification Code அனுப்புவார்கள். அதன் மூலம் நமது கணக்கிற்குள் நுழையலாம்.

Security Question:


நீங்கள் ஜிமெயில் கணக்கு தொடங்கும் போதே இந்த பாதுகாப்பு கேள்வியினை தேர்வு செய்திருப்பீர்கள். மறந்துவிட்டால் Edit என்பதை சொடுக்கி கேள்வி, பதிலை மாற்றிக் கொள்ளலாம்.

இவற்றை கொடுத்தப் பின் கீழே Save என்பதை சொடுக்க மறந்துவிடாதீர்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். நமது கணக்கையே ஹேக் செய்யத் திறமை உள்ளவனுக்கு இவற்றைப் பற்றி தெரியாமலா இருக்கும்? ஹேக் செய்தவன் இதனையும் மாற்றிவிடலாம். பிறகு எப்படி நமது கணக்கை மீட்பது? அதற்கும் வழி தருகிறது கூகுள்.


ஜிமெயில் தளத்தில் உள்நுழையும் படிவத்திற்கு கீழே Can't access your account? என்று இருக்கும். (உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டாலும், பயனர்பெயர் மறந்துவிட்டாலும்  இதனை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.)

அதிலே  கூறப்படும் வழிமுறைகளின்படி செல்லவும். அல்லது நீங்கள் நேரடியாக https://www.google.com/accounts/recovery/knowledgetest செல்லுங்கள். அதுவும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய கணினி ஐபியில் இருந்து செல்ல வேண்டும். அங்கே உள்ள படிவத்தை கவனமாக பூர்த்தி செய்யுங்கள்.


உங்கள் கணக்கை மீட்டெடுப்பது தொடர்பாக கூகுள் உங்களை தொடர்புக் கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரியை இரண்டு முறை கொடுக்க வேண்டும். இதனை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்.


நீங்கள் ஜிமெயில் கணக்கை உருவாக்கிய மாதம் மற்றும் வருடத்தையும் (இது பற்றி கீழே பார்க்கவும்), கடைசியாக நீங்கள் கொடுத்திருந்த கடவுச்சொல்லையும் கொடுக்க வேண்டும். இவை இரண்டும் அவசியம் கொடுக்க வேண்டும். மேலும் கடைசியாக நீங்கள் உள்நுழைந்த நாள் தெரிந்தால் அதனை கொடுக்கவும்.


மேலுள்ள தகவல்களையும், அதற்கு கீழே உள்ள Product Informationதகவல்களையும்  உங்களுக்கு தெரிந்தால் கொடுக்கலாம். அதிகமான தகவல்களை கொடுப்பது நல்லது.

அதன்  பிறகு Submit Answers என்பதை சொடுக்குங்கள். பிறகு உங்கள் கணக்கை மீளப்பெறுவது பற்றி நீங்கள் கொடுத்துள்ள புதிய மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்புவார்கள்.

ஜிமெயில் கணக்கை உருவாக்கிய நாள்:


இதனை தெரிந்துக் கொள்ள ஜிமெயிலில் Settings => Forwarding and POP/IMAPஎன்ற பகுதிக்கு சென்றால் அங்கே POP Download என்பதில் உருவாக்கிய நாள் இருக்கும்.

கணக்கை மீளப்பெற்றவுடன் செய்ய வேண்டியவைகள்:

புதிய கடவுச்சொல்லைக் கொடுத்து உங்கள் கணக்கை மீளப்பெற்றவுடன் சில விசயங்களை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

1. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் வேறொரு மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வர்ட் செய்யப்படுகிறதா? என பாருங்கள். அதனை பார்க்க
Settings => Forwarding and POP/IMAP பகுதிக்கு சென்று Forwading என்ற இடத்தில் சரி பாருங்கள்.


மேலும் Filters பகுதியிலும் சரி பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால் உடனே அவற்றை நீக்கிவிடுங்கள்.

2. மேலே சொன்ன மூன்று பாதுகாப்பு வழிமுறைகளை உடனே செயல்படுத்துங்கள். அதில் Security Question-ஐ மட்டும் மாற்றிவிடுங்கள்.

3. Gmail தளத்தின் கீழே Last account activities என்ற இடத்தில் உள்ள Detailsஎன்பதை கிளிக் செய்தால் எங்கிருந்தெல்லாம் அந்த ஜிமெயில் பார்க்கப்பட்டது என்பதை அறியலாம். அதில் Sign out all other sessions என்பதை கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget