/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Tuesday, September 11, 2012

பூமியின் அழிவில் இணையத்தின் பங்கு [Infographic]!!


                                           

இப்பொழுது உலக நாடுகள் அனைத்திருக்கும் உள்ள முக்கியமான பிரச்சினை உலக வெப்பமயமாதல். தொழில்நுட்பம் வளர வளர நன்மைகளோடு தீமைகளும் சேர்ந்தே வளர்கின்றது. நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினால் பூமி வெப்பமாகி கொண்டு வருகிறது. இதனால் துருவங்களில் உள்ள பனி கட்டிகள் உறைந்து கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரில் மூழ்கி விடும் என்றும் விஞ்ஞானிகள் கருது கின்றனர். 

இந்த பூமியின் அழிவில் நாம் தினமும் உபயோகிக்கும் இணையத்தின் பங்கும் கணிசமாக உள்ளது. இன்டெர் நெட்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்கள? ஒரு சிறிய உதாரணம்

கூகுளின் ஒரு தேடல் மூலம் உருவாகும் CO2 ஒரு கார் மூன்று இன்ச் நகர்ந்தால் உருவாகும் CO2 அளவிற்கு சமமாம்.  மற்றும் ஒரு ஸ்பாம்  மெயில் ௦.3 கிராம் அளவுடைய கார்பன்-டை-ஆக்சைட் வாயுவை வெளியிடுகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 64 ட்ரில்லியன் ஸ்பாம் மெயில்கள் அனுப்ப படுகிறதாம். இந்த ஸ்பாம் மெயில்கள் 1.6 மில்லியன் கார்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு சமமாக CO2 வாயுவை வெளியிடுகிறதாம். 

பிரபல இணையதளமான Wordstream உலக அழிவில் இணையத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு Infographic வெளியிட்டு உள்ளது. 


No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget