/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, September 17, 2012

உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள சில டிப்ஸ்..




நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்).
  1. அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.
  1. அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்
  1. இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்குநீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்
  1. அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.
  1. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்)
  1. கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ‘K’ (OK) என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
  1. போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)
  1. அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.
  1. ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.
  1. கருத்துவேறுபாடு வந்து பேசாம இருந்தாங்கனா 'மிஸ் யூ' மெசெஜா வரிசையா அனுப்புங்க. அவங்க கோபத்தை குறைக்கும்.
  1. நீங்க சாப்பிட்றீங்களோ இல்லையோஎவ்ளோ வேலை இருந்தாலும் 3 வேளையும் கரெக்ட்டா போன் (இல்லனா மெசெஜ்) பண்ணி சாப்டியா?னு அவங்கள கேளுங்க.
  1. அவங்களோட பிறந்தநாள்முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. (அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)
  1. அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்ததுஅதான் வந்தேனு சொல்லுங்க.
  1. எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க.
  1. சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க..
  1. ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறிவளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.
  1. பொதுவா பெண்கள் கோபத்தையோ பிடிக்காததையோ வெளிப்படையா சொல்லமாட்டாங்க. ஆண்கள் தானாக புரிந்துகொள்ளனும்னு நெனப்பாங்க. அதுனால எதுனாலும் அவங்கள கலந்துகிட்டு முடிவெடுங்க.
  1. அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை..
  1. இன்டர்நெட்டிலோ மொபைலிலோ சாட் பண்ணும்போது வேறு புதிய பெண் அறிமுகமானால் கவனமாகப் பேசுங்கள். அது உங்கள் காதலியாகவே கூட இருக்கலாம். உங்களை சோதிக்கும் முயற்சியாக இருக்கும்.
  1. அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்.
  1. ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் 'அதுதான் எனக்குத் தெரியுமே'னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க.
  1. அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து அறுக்காமல் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசுங்கள்.
  1. எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்.
  1. உனக்காக நானிருக்கிறேன் என்றும்நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர்களது உள்ளங்கை பிடித்து அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.
இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாதுகடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget