ஒரே கணிணியில் பல இயங்குதளம் சாத்தியமா?? சாத்தியம் தான்.
என்ன சார் இது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வைத்துக் கொண்டே நாம படும் பாடு சொல்லி தீராது. அப்படி இருக்கும் போது கணிணியில இருக்க ஹார்ட்டிஸ்க் மொத்தமாக காலி பண்ணனும் னு முடிவு கட்டி இப்படி பதிவிடுறீங்களானு புலம்பாதீங்க. வழி இருக்கு!
வாங்க பார்க்கலாம்.
VMware பற்றி கேள்வி படாதவரங்களுக்காக ஸ்பெஷல் பதிவு.
நியூ ரோ இமேஜ்களை சிடி டீவிடி யில ரைட் பண்ணாம அவற்றை POWER ISO, MAGIC ISO போன்ற மென் பொருட்களின் உதவியால் பார்வையிடலாம். இது நிறைய பேருக்கு தெரிந்த மேட்டர். தெரியாதவங்க இங்க கிளிக் பண்ணி படிங்க.
அது மாதிரி ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்து இருப்பவங்க மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பயன்படுத்த ஹார்டிஸ்கில் நிறுவ அவசியம் இல்லை. மொத்தமா ஓஸ் இமேஜ் உருவாக்கி பயன்படுத்தலாம். கணிணியில இல்லாத சில வசதிகளை கூட இந்த இமேஜ் களின் வாயிலாக பயன்படுத்தலாம்.
எடுத்துகாட்டாக XP பயன்படுத்துறவங்களுக்கு வின்டோஸ்7 எப்படி இருக்குனு பார்க்க ஆர்வம் வரலாம். கணிணி மாணவர்கள் லினெக்ஸ் போன்ற மல்டிபிள் ஓஸ்களை கணிணியின் வேகம் குறையாம பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தி பாருங்க.
நான் அடிக்கடி பயன்படுத்துற சாப்ட்வேர்கள் அனைத்தையும் ஒன்னா நிறுவி ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இமேஜ் வெச்சி இருக்கேன். இப்பஇருக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன ஆனாலும் கவலை இல்ல. அடிக்கடி சாப்ட்வேர்களை நிறுவ அவசியம் இல்ல. ஆப்பரேடிங் சிஸ்டம் காலி ஆனாலும் டாகுமென்ட்ஸ் காலி ஆகாது.
முக்கியமாக கணிணியில் நிறுவப்பட்டுள்ள OS கு எந்த வித சேதமும் ஏற்படாது.
(மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் லோட் செய்யப்பட்டுள்ள XP)
சிறிய பதிவு னு திட்டாதீங்க ! பெரிய மேட்டர். முயற்சி பண்ணி பாருங்க.
கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணுங்க!!!
No comments:
Post a Comment