நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.