/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, March 6, 2013

மாமூத் (Mammoth) யானை பற்றிய தகவல்!!


மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. மாமூத் என்கிற வார்த்தையானது மன்சி என்ற ருஷ்ய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும்.



மாமூத்துக்கள் தற்கால யானைகளை ஒப்பிடும் போது மிகவும் பேருரு உடையதாகும். 

ஆங்கிலச் சொல் “mammoth” என்பது “பெரிய” அல்லது “மிகப்பெரிய” என்கிற பொருள் தருவதாகும். சோங்குவா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட படிமமே இதுவரை கண்டுபிடிக்க பட்ட படிமங்களிலேயே மிகப்பெரியது (Songhua River mammoth). அது ஏறத்தாழ ஐந்து மீட்டர் உயரம் இருந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக மாமூத்துகள் ஆறு முதல் எட்டு ட‌ன்கள் எடை இருந்திருக்க கூடும் சில ஆண் மாமூத்துகள் பன்னிரண்டு ட‌ன்கள் வரை இருந்திருக்கலாம் என கருதபடுகிறது.
சுமார் 6000 வருடங்கள்க்கு முன்பு கூட அலாஸ்காவில் வாழ்ந்த இவை அதன் பிறகு மறைந்த்ன.உயிரின மறைவில் சமீப காலத்தில் நடந்த சம்பவம் என கொள்ளலாம்.

காணாமல் போன உயிரினங்கள் மீண்டும் உருவாக்கம்


மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் இப்போது பூமியில் உயிருடன் இல்லை. ஆனால் ஆய்வகத்தில் டைனோசர்களை உருவாக்க முடியும் என்று கற்பனையாகச் சொல்லி இருப்பார்கள்.
அது வெறும் கற்பனையல்ல. நிஜத்திலும் அதுபோன்று இறந்துபோன உயிரினங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகளின் முன்-னோடி இனம் ‘ஊல்லி மாமூத்’. தற்போதுள்ள யானைகளைவிட மிகப்பிரம்-மாண்டமானவை மாமூத் யானைகள். பனிக் காலத்தில் வாழ்ந்த இவற்றுக்கு உடல் முழுவதும் 3 அடி நீள ரோமங்களும், மிகப்பெரிய தந்தங்களும் உண்டு. இந்த யானைகளும், டைனோசர்-களைப்போல கால மாற்றத்தில் அழிந்து போய்விட்டன.

பழங்கால பொருட்கள், உயிரினங்கள் பற்றி நாம் பூமியில் புதைந்திருக்கும் படிமங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். பனிப்-பிரதேசத்தில் இறந்த உயிரினங்களின் படிமங்கள் நீண்ட காலத்துக்கு சிதைவுறாமலும், கெட்டுப்-போகாமலும் கிடைக்கிறது. இப்படி கிடைத்த சில படி-மங்களின் மூலம் ஒரு சில உயிரினங்களின் டி.என்.-ஏ.வை வரையறை செய்ய முடிந்துள்ளது. அந்த டி.என்.ஏ. மாதிரியை செயற்கையாக உருவாக்கி தற்போதுள்ள உயிரினங்களில் செலுத்தி புதிய மாற்றத்துடன் பழைய உயிரினங்களை திரும்பவும் உயிரூட்டிக் கொண்டு வரமுடியும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.
இந்த முறையில் மாமூத் வகை யானைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று கனடாவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கேம்பல் கூறுகிறார்.

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாமூத் யானையின் தாடைப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் படிமம் பனிக்கட்டிக்கு இடையில் கெடாத நிலையில் கிடைத்துள்ளது. அதேபோல் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கீரிப்பிள்ளையின் எலும்புக்கூடு படிமமும் ஏற்-கெனவே கிடைத்திருந்-தது. இவற்றை ஆராய்ந்ததில் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்தது. இதன்-மூலம் அதன் ரத்தத்தை மறுஉற்பத்தி செய்ய முடியும் என்று தெளிவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பத்துக்கு ‘ஜெனிடிக் அடாப்டேசன் டெக்னிக்’ என்று பெயர்.இது தொடர்பான ஆய்வுகள் தொடர உள்ளன. இதில் வெற்றி கிடைத்தால் நமது காலத்திலும் டைனோசர்கள், மாமூத் யானைகள் போன்ற பழங்கால உயிரினங்கள் நடமாடும்!

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget