சாதரணமாக மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க வேண்டுமெனில் நாம் அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களின் இணைய இணைப்பு மென்பொருளை பயன்படுத்தி இணைப்போம். ஆனால் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் எந்தவித மென்பொருளும் இன்றி இணையத்தை இணைக்க முடியும். ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க USB கேபிள் வேண்டும், இல்லையெனில் ஆன்ட்ராய்ட் பொபைல் போனிலும், உங்களது கணினியிலும் Wifi வசதி இருந்தால் அதை கொண்டும் இணையத்தை இணைக்க முடியும். USB கேபிள் மூலம் இணையத்தை இணைக்க அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான ஆன்ட்ராய்ட் USB ட்ரைவர்களை கணினியில் நிறுவ வேண்டும்.
பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Wireless & networks என்பதை தேர்வு செய்யவும்.
பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Tethering & portable hotspot என்பதை தேர்வு செய்யவும்.
பின் அடுத்து தோன்றும் விண்டோவில் USB கேபிள் மூலமாக இணைக்க USB tethering என்பதை தேர்வு செய்யவும். Wifi மூலமாக இணைக்க Portable Wi-Fi hotspot என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது சில நெடிகளில் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும். முக்கியமான ஒன்று முதலில் உங்கள் மொபைல் போனில் இணைய சரியாக இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். மொபைல் போனில் இணையப்பக்கம் ஒப்பன் ஆகிறதா என்பதை சரி பார்த்துக்கொள்ளவும்.
இவ்வாறு செய்யும் போது உங்கள் கணினி இணைய இணைப்பில் இணைக்கப்படவில்லையெனில் அதற்கு முக்கிய காரணம் USB ட்ரைவர் சரியாக நிறுவப்பட்டிருக்காது. USB ட்ரைவர்களை கணினியில் நிறுவிய பிறகுதான் இணையம் இணைக்கப்படும். கீழே இருக்கும் சுட்டியை பயன்படுத்தி ஆன்ட்ராய்ட் USB ட்ரைவர்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- Acer Android USB Driver
- Asus Android USB Driver
- Dell Android USB Driver
- Google USB Driver
- HTC Android USB Driver
- Huawei Android USB Driver
- Intel Android USB Drivers
- Lenovo Android USB Driver
- LG Android USB Driver
- Motorola Android USB Driver
- Samsung Android USB Driver
- Sony MobileAndroid USB Driver
- Toshiba Android USB Driver
- ZTE USB Driver
No comments:
Post a Comment