நம்மில் பலர் கட்டாயம் இரண்டிற்கு மேல் மின்னஞ்சல் முகவரிகள்(Mail id) வைத்திருப்போம், அவை தொழில் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது பதிவுலகம் சார்ந்தோ இருக்கலாம். எத்தனை முகவரிகள் வைத்திருந்தாலும் அவற்றை இனி ஒரே ஜிமெயில் அக்கவுண்ட் மூலமாக இயக்கலாம். அவை கட்டாயம் மற்றொரு ஜிமெயில் அக்கவுண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் POP access வசதிக் கொண்ட எந்தவொரு மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கலாம் உ.தா. யாஹூ, லைவ் போன்றவையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அது எப்படி?
- முதலில் ஜிமெயில் settings செல்லவும்
- அங்கே இந்த Check mail using POP3 வரிசையில் add பட்டனை சொடுக்கவும் [படம்1]
- பின்னர் உங்களுக்கு தனியாக வரும் பெட்டியில் எந்த மின்னஞ்சல் முகவரியை இதனுடன் இணைக்க வேண்டுமோ அதை இங்கே கொடுக்கவும்.
- அடுத்ததாக உங்கள் கடவுச்சொல்லைத் தரவும் (இது இணைக்கப்படும் அஞ்சலுடையது)
- அதன் கீழுள்ள விருப்ப தேர்வுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். லேபிளாக தேர்வு செய்தால் அந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணக்கில் ஒரு சீரான லேபிளின் கீழ் வரும்.[படம் 2]
- நீங்கள் இணைக்கப் போவது ஜிமெயில் தவிர மற்ற சேவை என்றால் உங்கள் கணக்கில் பாபப் வசதியை உண்டாக்கிக் கொள்ளுங்கள் உதாரணமாக யாஹூவை தந்துள்ளேன்[படம் 3].
- இந்த பாபப் அல்லது கடவுச் சொல்லில் பிழையிருந்தால் உங்களால் இவ்வசதியை புகுத்தமுடியாது [படம் 2]கவனமாகச் செய்யவும்.
- இணைத்தப்பின் இப்படி உங்கள் settingsல் காட்டும் அருகிலேயே அதை edit செய்யவும் திரும்ப அழிக்கவும் சுட்டிகள் உள்ளது.[படம் 5]
- எத்தனைக் அஞ்சல் கணக்காகயிருந்தாலும் இதை ஒருமுறை இணைத்துவிட்டால் போதும் தொடர்ந்து உங்கள் புதிய மின்னஞ்சல்கள் உங்கள் பெட்டியைத் தேடிவரும். இதன் மூலம் அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே மையப்படுத்தலாம்.
- ஆரம்பத்தில் புதிய அஞ்சல்கள் தாமதமாகத் தான் உங்கள் பெட்டிக்கு வரும் அதுவும் கூடியவிரைவில் நீங்கள் பயன்படுத்தும் வேகத்திற்கேற்ப அதன் வேகமும் அதிகரிக்கும்.
படம்: 1
படம்: 2
படம்: 3
படம்: 4
படம்: 5
No comments:
Post a Comment