சரி 4G என்றால் என்ன?
4G என்பது 3G ஸ்டாண்டர்டின் அடுத்த தலைமுறை ஆகும். இது LTE (Long term evolution) of 3G எனவும் சொல்லலாம். அதாவது 3G யின் கடைசி தான் 4G யின் ஆரம்பம். இது வாய்ஸ், டேட்டா,வீடியோ தரவிறக்கம, மொபைல் டிவி போன்றவற்றை பயனர்களுக்கு "Anytime Anywhere"என்ற அடிப்படையில் தரும்.
இந்த 4G ஆனது நிற்கும் மட்டும் மெதுவாக நகரும் பயனாளிகளுக்கு 1ஜிபி அளவிலான ஸ்பீட் டேட்டா ரேட் தரும். அதே நேரம் கார் மற்றும் ரயில் போன்றவற்றில் உள்ள வேகமாக நகர்பவர்களுக்கு 100எம்பி வேகம்(4G standard பொறுத்து இது கூடும் அல்லது குறையும்).
2002 ஆம் ஆண்டு 4ஜி க்கான திட்டங்களை ITU-T கூறியது. 2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax தொழில்நுட்பம் உடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து மற்ற சில நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. 3G போலவே இது ஒயர்லெஸ் மோடம் ஆகவும் பயன்படுகிறது.
இதுவும் 3ஜி போலவே
---> வீடியோ காலிங்
---> மொபைல் டிவி
---> மிக வேகமான டேட்டா சர்வீஸ்
---> மிக அதிகமான ஏரியா கவரேஜ்
---> ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
---> வீடியோ கான்பரன்சிங்
போன்றவற்றை தரும்.
மிக அற்புதமான பயன் என்றால் நீங்கள் 4ஜி மொபைல் சிஸ்டத்தை வேறு எந்த மொபைல் ஸ்டாண்டர்டிலும் பயன்படுத்தலாம்.அதாவது 3G, 2G போன்றவற்றில்.
அத்துடன் இது இணைய பயன்பாடுகளுக்கு ipv6 முறையை கையாளும்.(நாம் பயன்படுத்துவது ipv4) இதனால் மிக அதிக எண்ணிக்கையிலான wireless சர்வீஸ்கள் பயன்படுத்த முடியும்.
இது மிக அதிக திறன் வாய்ந்த அட்வான்ஸ்டு ஆன்டெனாக்களை பயன்படுத்துகிறது. இதனால் சிக்னல் கவரேஜ் ஆனது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும். இது முழுவதுமாக IP based Integrated Network. இதில் செய்திகள் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
4ஜியிலும் பல வகையான சேவை முறைகள் உள்ளன. இதில் WiMax (சில இடங்களில் WiFi ) ஆனது மொபைல் இன்டெர்நெட் சேவைக்கும் LTE ஆனது பொதுவான 4ஜி பயன்பாடுகளுக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துக்கும் 4G ஆனது 3ஜி UMTS களையே பயன்படுத்துகிறது.
நோக்கியா சீமென்ஸ் ஆனது 2006 இல் 4ஜி யில் டவுன்லிங்கில்(Antenna to Mobile) இரண்டு பயனர்கள் HD-TV வீடியோ ஸ்ட்ரீமிங்கும் மற்றும் அப்லிங்கில் (Mobile to Antenna) Online Gaming போன்றவற்றை செய்தும் காட்டியது. இதன் பின்னர் எரிக்சன், மோட்டரோலா, எல்ஜி போன்றவை இதன் மேம்பட்ட பயன்பாடுகளை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை அறிமுகம் செய்தன.
4Gயில் மிகக் குறைவான cost இல் டேட்டா சர்வீஸ்களை பயன்படுத்த முடியும். ஆனால் இது இந்த சர்வீஸ் தருகின்ற ஆபரேட்டர் பொறுத்தது.
No comments:
Post a Comment