எதிர்காலத்தை பற்றி முன்கூட்டியே கணிப்பதில் எப்போதும் பலருக்கும் ஆர்வம் அதிகம். தினமும் புத்தம் புதிய அறிமுகங்களுடன் பெருமளவில் மாற்றம் கண்டு முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இத்துறையில் அடுத்து வரும் மாற்றங்களென பெருமளவில் பேசப்படும் விடயங்கள் எவை என்பது பற்றிய தொகுப்பே இப்பதிவு.
டெஸ்க்டாப் கணனிகளுக்குப் பதில் ஸ்மார்ட் போன்கள்
குறைந்தது மூன்று வருடங்களுக்குள் டெஸ்க்டாப் கணனிகளின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் என கணிப்பிடுகின்றார்கள் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த மார்க்கட்டிங்க் வல்லுஞர்கள்.
இதனாலேயே பிரபல நிறுவனங்கள் பலவும் ஸ்மார்ட் தொலைபேசிகளை உருவாக்குவதில் போட்டி போடுகின்றன.
உலகம் முழுவதும் உள்ள மொபைல் பாவனையாளர்களில் 43 % வீதமானோர் ஏற்கனவே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகமாக வெப் பிரவுஸிங்க், கேம்ஸ் விளையாடுவது, வீடியோ பார்வையிட போன்றவற்றிற்காகவே கணனிகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்த போவதாக கணிக்கின்றார்கள்.
சில வருடங்களில் டெஸ்க்டாப் கணனியைப் பயன்படுத்தும் காரணத்திற்காகவே நீங்கள் ஏளனமாக பார்க்கப்படலாம்.
Augmented Reality
நீங்கள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புகின்றீர்கள் என கற்பனை செய்துகொள்ளுங்கள். காரில் ஏறியதும் முகப்பு கண்ணாடியில் நாளை அலுவலகத்திற்கு வெளியே நடைபெறவுள்ள முக்கிய மீட்டிங்க் பற்றி விஷுவல் மூலம் உங்களுக்கு நினைவூட்டப்படுகின்றது.
அதன் பின்னர் செல்லும் வழியில் நாளை சந்திக்கவுள்ள ஹோட்டல் இருக்கின்றது. நாளைக்கு பிஸினஸ் பற்றி பேசுவதற்கு வரவேண்டிய ஹோட்டல் இதுதான் என்ற தகவல்கள் உங்களுக்கு கிடைக்கின்றது.
இவை அனைத்தும் இன்னும் சில வருடங்களில் சாத்தியமாகவுள்ளது.
Augmented Reality என்பது இணையம் , ஏனைய மூலங்களில் பரவிக் கிடக்கின்ற தகவல்களை ஒன்றினைத்து நிதர்சன உலகிற்கு கொண்டுவருவதாகும்.

தற்போது ஸ்மார்ட்போன்களிலுள்ள அப்பிளிகேஷன்கள் இவற்றைச் செய்கின்றன. அவை இன்னும் வளர்ச்சியடைந்து முழுவதுமாக பயனடையும் காலம் தூரத்தில் இல்லை என்றே கூறலாம்.
இந்த பிரிவிலும் முந்திக்கொண்ட கூகிள் நிறுவனம், கூகிள் கண்ணாடித் திட்டம் என்ற தயாரிப்பை அறிமுகம் செய்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது.
Fujitsu Lifebook 2013
எங்கு சென்றாலும் டிஜிட்டல் சாதனங்களினின்றி வாழவே முடியாது என்போர் அவர்களுடன் லேப்டாப், கைத்தொலைபேசி, டேபெலட், டிஜிட்டல் கமெரா, என அனைத்தையும் தனித்தனியாக எடுத்துச் செல்வார்கள்.
எங்கு சென்றாலும் டிஜிட்டல் சாதனங்களினின்றி வாழவே முடியாது என்போர் அவர்களுடன் லேப்டாப், கைத்தொலைபேசி, டேபெலட், டிஜிட்டல் கமெரா, என அனைத்தையும் தனித்தனியாக எடுத்துச் செல்வார்கள்.
எனினும் எல்லா நேரமும் இவ்வளவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. வெவ்வேறு வகையான டிஜிட்டல் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டதுதான் 2013 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் Fujitsu Lifebook.
லைப்புக் வந்தபின்னர் ஒரு லேப்டாப்பிலேயே கைத்தொலைபேசி, டேபெலட், டிஜிட்டல் கமெரா போன்ற அனைத்தையும் செருகி வைத்துவிடலாம்.
மேகக் கணிமை - Cloud Computing
தொழில்நுட்ப உலகில் கடந்த சில வருடங்களாக பரபரப்பாக பேசப்படும் விடயமாக கிளவுட் கம்யூட்டிங்க் உருவாகியுள்ளது.
ஹாட்வேர் , சாப்ட்வேர் என்பவற்றிற்கு தனித்தனியாக செலவு செய்ய தேவையில்லை என்பதே கிளவுட் தொழில்நுட்பத்தின் வெற்றி எனலாம்.
கிளவுட் கம்யூட்டிங்க் தொடர்பில் விக்கிபீடியாவில் முழு விபரங்களைஇந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது இந்தியாவிலும் வேகமாக வளர்ந்துவருகின்றது கிளவுட் கம்யூட்டிங்க் தொழில்நுட்பம்.
இதற்கு உதாரணமாக இந்திய அரசின் இன்பார்மேஷன் டெக்னாலாஜி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் நாடளாவிய ரீதியில் கிளவுட் நெட்வேர்க்கை உருவாக்கி அதில் சகல மாநிலங்களின் டேட்டா சென்டர்களை இணைக்கவுள்ளதாகவும்,
இதன் மூலம் அரசு மற்றும் மக்களிடையே தகவல் பரிமாற்றத்தை இணையத்தின் மூலம் பகிரும் செயற்பாட்டை தீவிரப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
2011 ஆம் ஆண்டில் இந்திய மார்கெட்டில் $ 860 மில்லியன் டாலரிலிருந்து 912 மில்லியன் டாலர் வரை கிளவுட் தொழில்நுட்பம் வளர்ச்சிகண்டுள்ளதாக market advisory firm Zinnov Management Consulting தெரிவித்துள்ளது.
இனி வரப்போகும் ஆண்டுகளில் இன்பார்மேஷன் டெக்னாலொஜிக்கென இந்தியா செலவழிக்கும் மொத்த தொகையில் 20 % வீதம் கிளவுட் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்ய நேரிடலாம் எனவும் இது அத்துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என Zinnov Management Consulting தெரிவிக்கின்றது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் இன்னும் பல நுட்பங்கள் வரவிருக்கின்ற போதும் மேலுள்ளவையே பெருமளவில் பேசப்படவிருக்கின்றன
No comments:
Post a Comment