/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, August 1, 2012

Hotmail க்கு Goodbye. மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகிறது Outlook.com



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மின்னஞ்சல் சேவையான Hotmail இன்று முதல் Outlook.com ஆக பெயர் மாற்றம் செய்யபப்ட்டுள்ளதுடன், சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
1988ம் ஆண்டு தொடக்கம் இயங்கிவரும் Hotmail சேவை கூகுளின் ஜீமெயில் வெளிவந்த பின்னர் பாரிய வீழ்ச்சி கண்டது. அதன் Inbox இல் உள்ள அதிக டூல்களினால், ஓவர் லோட் ஆகுவதுடன், மின்னஞ்சல் சேவைகள் மெதுவாக இயங்குவதாக முறைப்பாடு எழுந்தது.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளுடன், Outlook.com எனும் மாற்று மின்னஞ்சல் சேவையை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், லின்க்டின், கூகுள் என்பவற்றுடன் நேரடியாக உங்களது மின்னஞ்சல்களை இணைக்க கூடிய வசதியையும், விரைவில் ஸ்கைப்பையும் இவ்வாறு இணைக்கவுள்ளதாகவும் அவுட்லுக் வடிவமைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் நண்பர்களின் பேஸ்புக் புகைப்படங்கள், சமீபத்திய டுவீட்கள், சேட்டிங் ஹிஸ்டரி, வீடியோ கால் என அனைத்தையும் ஒரே மின்னஞ்சல் சேவையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது மைக்ரோசாப்ட்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget