/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Sunday, August 26, 2012

ஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு !!




நேற்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். ஆம் சாம்சங் மீது அந்த நிறுவனம் காப்புரிமை தொடர்பாக தொடர்ந்த வழக்கில்  கலிஃபோர்னியா கோர்ட் சாம்சங்க்கு 5800 கோடி அபராதம் விதித்து உள்ளது. அத்தோடு  சில மொபைல், Tablet மாடல்களை அமெரிக்காவில் விற்கவும் தடை செய்துள்ளது. 

இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் தான் கொடிகட்டி பறக்கின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது, தான் Patent பெற்ற மாடல்கள் போன்றே சாம்சங் நிறுவனமும் வெளியிடுகிறது என புகார் தந்தது. இதில் Nexus S, Epic 4G, Galaxy S 4G, Samsung Galaxy Tab போன்றவை உள்ளடக்கம். இதில் HTC, Motorola போன்றவை மீதும் ஆப்பிள் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் சாம்சங் தான் முக்கிய எதிரி.

Style, User Interface என பல வகைகளில் ஒன்றாக உள்ளது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புகார். இதே போல பதிலுக்கு சாம்சங் நிறுவனமும் பல வழக்குகளை பதிந்தது. இரண்டும் மொத்தமாக பத்து நாடுகளில் 50 வழக்குகள் பதிந்து இருந்தன. 

பல நாடுகளில் வழக்குகள் இருக்க, நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில் நடந்த வழக்கின் முடிவில் தான் இந்த 5800 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க மதிப்பில்  $1,049,343,540. இந்திய மதிப்பில் 58244547728.18 கோடி.


இந்த வழக்கு தான் சாம்சங் வரலாற்றில் மிகப் பெரிய அடி. மேற்கூறிய மொபைல் மாடல்களை இனி அமெரிக்காவில் விற்க கூடாது என்று கோர்ட் கூறிவிட்டது. 

இத்தோடு இந்த வழக்கு முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் சாம்சங்க்கு அடி விழும் என்று சொல்லப்படுகிறது. 

முழுக்க முழுக்க ஆன்ட்ராய்ட் போன்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  ஆனால் இதில் கூகுள்க்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். ஆம் கூகுள் கடந்த வருடமே மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கி விட்டதால் அதற்கு 17,000 காப்புரிமைகள் கையில் உள்ளன. 

இதனால் சாம்சங்க்கு மாற்றாக LG, HTC, Motorola போன்றவை தங்கள் மொபைல் மாடல்களை அதிகமாக விற்பனை செய்ய ஒரு வாய்ப்பாக இது அமையும். ஆனால் இது இறுதி தீர்ப்பு அல்ல என்று சாம்சங் கூறி உள்ளது.

இதே போன்று ஆப்பிள் மற்ற நிறுவனங்கள் மீதும் வழக்குகள் தொடர்ந்து உள்ளது அவற்றின் தீர்ப்பு ஆப்பிள்க்கு சாதகமாக வந்தால் ஆப்பிள் தான் மொபைல் உலகின் தாதா என்று ஆகிவிடும்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget