Notifications வருவதை தடுக்க, குறிப்பிட்ட Game அல்லது Application Request வரும் போது, கீழே உள்ளது போல அதன் வலது மூலையில் வைத்தால் ஒரு பெருக்கல் குறி வரும், அதை கிளிக் செய்ய வேண்டும்.
Game/Application எதுவும் வேண்டாம் என்றால் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை கிளிக் செய்து அதில் Privacy Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது வரும் பகுதியில்
. "Ads, Apps and Websites" என்ற பகுதியில் Edit settingsஎன்பதை தெரிவு செய்யவும்.
. "Ads, Apps and Websites" என்ற பகுதியில் Edit settingsஎன்பதை தெரிவு செய்யவும்.
இப்போது வரும் பகுதியில் Apps you use என்பதில் Edit Settings கொடுத்து (Right Click செய்து புதிய Tab- இல் ஓபன் செய்யவும்.) நீங்கள் இதுவரை பேஸ்புக்கில் பயன்படுத்திய அனைத்து Apps-களையும் நீக்க வேண்டும். (பெருக்கல் குறி மீது கிளிக் செய்து நீக்கி விடலாம்)
இப்போது மீண்டும் Ads, Apps and Websites பகுதிக்கு வந்து, Apps you use பகுதியில் Turn Off என்று கீழே உள்ளது போல உள்ள வசதியை கிளிக் செய்யவும்.
இப்போது வரும் பகுதியில் Turn Off Platform என்று கொடுங்கள். இது Success ஆனால் இனி யாரும் உங்களுக்கு Game, Apps Request களை அனுப்ப முடியாது. அதே சமயம் Facebook account பயன்படுத்தி நீங்கள் எந்த தளத்திலும் நுழையவும் முடியாது.
ஆனால் இந்த வசதி உடனடியாக Turn Off ஆவதில்லை. நிறைய பேருக்கு Error while disabling applications என்று வரும். அப்படி வந்தால் சிறிது நேரம்/நாள் கழித்து முயற்சி செய்யவும்.
இது Turn Off ஆகிவிட்டால் Games, Application Request-களில் இருந்து உங்களுக்கு விடுதலை. இல்லை என்றால் அடுத்த Settings க்கு வாருங்கள்.
How people bring your info to apps they use என்ற பகுதிதான் உங்கள் நண்பர்கள் பயன்படுத்தும் Games, Application களுக்கு உங்கள் தகவல்களை அனுப்புவதை தடுக்கும் பகுதி. அதில் Edit Settings கொடுத்து வரும் விண்டோவில் அனைத்தையும் Unclick செய்து விடுங்கள்.
இதன் மூலம் பெரும்பாலான Games, Apps Request-களை தடுக்கப்படும்.
No comments:
Post a Comment