மனிதர்கள்... தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக... உடலின் பல்வேறு உறுப்புக்களில்... அணிந்துகொள்ளும் அணிகலன்கள்... ஆபரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன... இந்த ஆபரண பட்டியலில்... பண்டைய காலம் தொட்டே... மிகவும் விலையுயர்ந்த... பொருட்களில் ஒன்றாக கருதப்படுவதுதான் முத்து (Pearl)….. இது... முசெல் (Mussel)... என்ற ஒரு வகை மெல்லுடலி….. இனத்தை சேர்ந்த... முத்துசிப்பியின் (Pearl Oyster)... உடலிலிருந்து... பெறப்படுகிறது.!
கடலில்.... அமைதியாக மிதந்து கொண்டிருக்கும்... ஒரு முத்துசிப்பியின் உடலுக்குள்... மணல் துகள்கள்.. நுழையும் போது... உடலில் ஏற்படும்... உறுத்தலை தாங்கிக் கொள்ள இயலாத சிப்பி.... தனது உடல் திசுக்களை (tissue)... அந்த மணல் துகளின்... மேல் பதியவைத்து... உறுத்தலை குறைக்க முயற்சிக்கிறது. அந்த திசுக்களே... நாளடைவில் வளர்ந்து.. பெரிதாகி.. முத்துக்களாக.. உருப்பெருகிறது..! இந்தவகையில்... ஒரு முத்துசிப்பிக்குள்... முத்து உருவாவதற்கு... தோராயமாக... மூன்று முதல்... ஆறு ஆண்டுகள் வரை ஆகிறது... இதனால்.... முத்து.... அரிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்றாகி... ஒரு விலையுயர்ந்த ஆபரணமாக.. காலம் காலமாக.. இருந்து வருகிறது.!
சற்றேறக்குறைய... முத்து முதன் முதலில் கண்டறியப்பட்டது... இந்தியப் பெருங்கடலை (Indian Ocean)... ஒட்டியுள்ள.. பிரதேசங்களில் தான் என்கிறது வரலாறு..! தென் தமிழகத்தில்... பாண்டியர் வம்சத்தினர் (Pandyan Dynasty, 500 BCE – 1345 AD)... ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் இருந்தே.. அதாவது கி.மு.500-லிருந்தே.. தமிழகத்தில்.. முத்துக்கள் புழக்கத்தில் இருந்ததாக... வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன... தொடர்ந்து.... மன்னார் வளைகுடா (Gulf of Mannar).... அரேபிய வளைகுடா (Persian Gulf).... தென் சீன கடல் (South China Sea) ஆகியவற்றை சார்ந்துள்ள பிரதேசங்களில்... இருந்தும் முத்து கண்டெடுக்கப்பட்டு... உலகின்.. பல்வேறு தேசங்களுக்கு... பண்டைய காலத்திலிருந்தே.. ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது.!
முத்து... என்றாலே.... உங்களுக்கு... வெண்மை நிறம் தான்.. ஞாபகத்திற்கு வரும்.. இல்லையா?...... உண்மையில்... கருப்பு (Black Pearl).. சிவப்பு (Red Pearl).. பச்சை (Green Pearl)... நீலம் (Blue Pearl)... மஞ்சள் (Yellow Pearl)… இளஞ்சிவப்பு (Pink Pearl) உள்ளிட்ட பல்வேறு நிறங்களில்.. முத்து கிடைக்கிறது... மனிதர்களால் முத்துக்கள் விரும்பி ஆபரணமாக அணியப்படுவதர்க்கு காரணம்.... முத்துக்களிருந்து வெளிப்படும்... ஒருவகையான ஈர்ப்பு மிக்க... பிரகாசமான ஒளி... என்றால் மிகையில்லை... அதற்க்கு காரணம்... கால்சியம் கார்பனைட் (Calcium Carbonate).... எனப்படும் வேதிப்பொருள் முத்துக்களில்.... அடங்கியிருப்பதுதான்.... இந்த வேதிப்பொருள் தான்... முத்து பிரகாசமாய் ஜொலிப்பதர்க்கு முக்கிய காரணமாய் விளங்குகிறது.!
கிட்டத்தட்ட... பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை... இயற்கையாக... கடலில் இருந்து... கிடைக்க பெற்ற... இயற்கை முத்துக்கள் (Natural Pearls) தான் பயன்பாட்டில் இருந்தன... அதன் பிறகு.. முத்துக்களை.. மக்கள்.. அதிக அளவில்.. வாங்கி பயன்படுத்தியதன் காரணமாக... முத்துக்களுக்கு.. பற்றாக்குறை ஏற்பட்டது.. உங்களுக்கு ஒன்று தெரியுமா.... இன்று நகைக்கடைகளில்.. புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான முத்துக்கள்... செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவைதான்...! செயற்கையான முறை என்றதுமே... ஏதோ.... ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களை வைத்து... முத்துக்களை.. தயாரிப்பார்களோ... என்று நினைத்துவிட வேண்டாம்... செயற்கையான முறையில் என்றால்... கிட்டத்தட்ட வளர்ப்பு தேனியில் இருந்து.. தேன் பெறுவதை போல... ஒரு மீன் போல முத்துசிப்பியை வளர்த்து... இயற்கையாக... சிப்பிக்குள்.. முத்து உருவாகும் போது ஏற்படும் நிகழ்வை... செயற்கையாக ஏற்படுத்துவார்கள்.!
அதன் படி... அதீத கவனத்துடன்... வளர்க்கப்பட்ட... முத்துசிப்பிகளுக்குள்... செயற்கையாக... மணல் துகள்களை.. அதன் உடலில் நுழைத்து... முத்து உருவாவதை தூண்டுவார்கள்... இம்முறையில் உருவாக்கப்படும்... செயற்கை முத்துக்கள் (Cultured Pearls).... கிட்டத்தட்ட... இரண்டு வருடங்களிலிலேயே... அதன் முழு வளர்ச்சியை எட்டிவிடுகிறது... அதோடு மட்டுமின்றி... இம்முறையில்.. ஒரே நேரத்தில்.. அதிக அளவில்.. முத்துக்களை... உருவாக்கவும் முடிந்தது.. இவ்வாறு செயற்கை முறையில்... முத்துக்களை உருவாக்கும் நுட்பத்தை.. உலகில்.. முதன் முதலாக... மிக்கிமொட்டோ கோகிசி (Mikimoto Kokichi, 1858– 1954) என்ற ஜப்பானிய வல்லுனர்... 1896 ஆம் ஆண்டு நிகழ்த்திக்காட்டினர்... அன்று முதல்... இன்று வரை... செயற்கை முத்துகளை உருவாக்குவதில் ஜப்பான் தான்.. உலகிலேயே முதலிடத்தில்.. தொடர்ந்து நீடித்து வருகிறது.!
இன்று நகைக்கடைகளில் கிடைக்கும்... 95% முத்துக்கள்... இவ்வாறு செயற்கை முறையில்... உருவாக்கப்பட்டவையே.! ஆனாலும் இன்றளவும்... பஹ்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா.. போன்ற நாடுகளில்... இயற்கையாக கடலில் இருந்து பெறப்படும் முத்துகள்... அதிக அளவில் விற்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.. இதுவரை.. இயற்கையாக கிடைத்த முத்துக்களில்… லாவோ சூ (Pearl of Lao Tzu, founded in Philippines)... என்ற முத்துதான்... உலகிலேயே மிகப்பெரிய முத்தாக கருதப்படுகிறது. இது கிட்டத்தட்ட... 9.5 அங்குல நீளமும்... 5.5 அங்குல விட்டமும்... 6.4 கிலோ எடையும்.... கொண்டதாகும்
No comments:
Post a Comment