/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, August 27, 2012

Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை??



                                                                         

இன்று இணையத்தில் கிட்டத்தட்ட அனைவரும் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.  நம்முடைய தகவல்களை எல்லாம் பேஸ்புக்கிடம் நாம் தருகிறோம். அத்தகைய பேஸ்புக் பாதுகாப்பானதா? என்னென்ன செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம்? 
இவை அனைத்தும் Facebook Privacy Settings பகுதியில் இருப்பவை. எனவே Home >> Privacy Settings பகுதிக்கு வரவும்.



உங்கள் பதிவுகளை யாருடன் பகிர்கிறீர்கள்? (Control Your Default Privacy)

தினமும் பேஸ்புக் பயன்படுத்தும் நபர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் பதிவுகளை Friends என்ற அளவில் பகிர வேண்டும். செய்திகளை, படங்களை பகிரும் போது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டும் பகிர Post என்பதற்கு அருகில் Public என்று இருப்பதை கவனித்து அதை மாற்றி போஸ்ட் செய்யலாம்.




இதை எல்லா பதிவுகளுக்கும் செய்ய Privacy Settings >> Control Your Default Privacyபகுதியில்  Friends என்பதை தெரிவு செய்ய வேண்டும். இங்கே செய்யும் மாற்றங்கள் நீங்கள் பதிவிடும் போதும் அப்படியே இருக்கும்.


குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டும் பகிர Custom என்பதை தெரிவு செய்யலாம்.




யார் உங்களை பார்க்கிறார்கள்? (How You Connect)

உங்கள் நண்பர்கள் உங்கள் Timeline க்கு வரும் போது நீங்கள் எழுதிய செய்திகள், படங்கள், உங்களைப் பற்றிய தகவல்கள் (மின்னஞ்சல் முகவரி, முகவரி, மற்ற பல) அனைத்தையும் அறிய முடியும். இதையே உங்கள் நண்பர் அல்லாத ஒருவர் வந்தும் பார்க்க முடியும். அதை தவிர்த்து உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் பகிர வேண்டும்.

இதற்கு Privacy Settings பகுதியில் How You Connect என்பதில் Edit Settings கொடுத்து கீழே உள்ள மாற்றங்கள் செய்யவும்.


இதில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் நான் Friends என்று கொடுத்து உள்ளேன். மற்ற இரண்டும் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.

Photo Tagging மற்றும் Timeline - இல் பகிர்தல்

இது எல்லோருக்கும் பெரிய பிரச்சினை. கண்டபடி நம்மை பல போட்டோக்களில் Tag செய்வது, நமக்கு சம்பந்தம் இல்லாத செய்திகளை நம் Wall- இல் பகிர்வது என்பதையே சிலர் பேஸ்புக்கில் தொழிலாய் கொண்டுள்ளனர் அவர்களிடம் இருந்து இந்த பிரச்சினையை வரும் முன் தடுக்கும் விதமாக சில Settings Change செய்யலாம். கீழே படத்தில் உள்ளபடி Timeline and Tagging பகுதியில் செய்யவும்.

Websites settings : 




2. உங்கள் பெயரை Search Engine-களில் யாரேனும் தேடினால் உங்கள் Timeline அவர்களுக்கு தோன்றும். இவ்வாறு வரக்கூடாது என்று நினைத்தால் Public search >> Edit Settings என்பதில் Enable public search என்பதை Unclick செய்து விடவும்.

3. பேஸ்புக் நமது தகவல்களை எந்த ஒரு Third Party தளத்துக்கும் விளம்பரத்துக்காக தரவில்லை என்று சொல்லுகிறது. ஆனால் இது எதிர்காலத்தில் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்கிறது. இவ்வாறு உங்கள் பெயர் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க Ads >> Edit setting >> Edit third party ad settings என்பதில் If we allow this in the future, show my information to என்பதில் No One என்று கொடுத்து விடுங்கள்.


4. பேஸ்புக்கில் இருக்கும் போது Sidebar - இல் உங்கள் நண்பர் அதை லைக் செய்துள்ளார், இதை லைக் செய்துள்ளார் என்று இருக்கும். இவை Facebook ads இவற்றில் உங்கள் பெயர் வருவதை தடுக்க Ads and friends >> Edit social ads setting பகுதியில் Pair my social actions with ads for  என்பதை No One என்று கொடுத்து விடுங்கள்.

யாருடன் Chat செய்கிறீர்கள்? 

நிறைய பேருக்கு தெரியாத முகங்களும் நண்பர்களாய் வர வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு வரும் போது சிலர் தேவை இல்லாமல் சாட்க்கு வந்து இம்சை தருவதும் உண்டு. அவர்களை தவிர்க்க குறிப்பிட்ட சிலருக்கு நீங்கள் Offline - இல் இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Online-இல் இருக்கலாம். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget