அவற்றில் கிடைக்கின்ற 2GB முதல் 25 GB என்ற சேமிப்பிடம் பெரிய கோப்புக்களை கிளவுட்டில் சேமித்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு போதாததாக இருக்கலாம்.
Syncbox Server என்பது உங்களுக்கென்ற தனிப்பட்ட கிளவுட் சேவையை உங்களிடமிருக்கும் ஹாட்டிஸ்க்கில் உருவாக்கிட உதவுகின்றது.
அலுவலகத்தில் அல்லது வீடுகளில் இருக்கும் கணினியிடையே மற்றும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் டிவைஸ்களிடையே இணையத்தின் மூலம் பெரிய கோப்புக்களை பகிர முடிகின்றது.
கீழுள்ள இணைப்பிற்கு சென்று தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னர் (சேர்வர் மென்பொருள் விண்டோஸில் மட்டும் இயங்கும்) ,
Syncbox ID , பாஸ்வேர்ட் , DDNS key and Data location என்பவற்றை தரவேண்டும்.
எனினும் Quick Install ஐ தெரிவு செய்தால் இவை அனைத்தும் தானாகவே உருவாக்கப்படும்.
மேலும் Taskbar இல் தெரியும் Synbox ஐகானை அழுத்தி தேவையான செட்டிங்கை மாற்றிவிட முடிகின்றது.
client மென்பொருளை Syncbox ID and password மட்டும் கொடுத்து இலகுவாக நிறுவிடலாம்.
மேலும் கோப்புக்களை server to client synchronization செய்தல் இதன் கூடுதல் வசதியாகும்.
இவை அனைத்தும் முடிந்த பின்னர் தனிப்பட்ட கிளவுட் சேமிப்பிடம் உருவாகிவிடும்.
தரவிறக்கம் செய்வதற்கு - http://www.isyncbox.com/download
No comments:
Post a Comment