இன்று தனது 100 வது சதத்தை அடித்து சாதனை நிகழ்த்தினார்.
இச்சாதனையின் பின்னால் இருக்கும் சில தகவல்களின் தொகுப்புக்கள் சில.
சச்சின் 100 அடித்தால் அது அணிக்கு ராசியில்லை அப்போட்டியில் தோல்வியுறும் என்பது பொதுவான ரசிகர்களின் கணிப்பு அதேபோல் இப்போட்டியிலும் சச்சின் 100 வது சதத்தை அடித்தார். எனினும் வங்கதேசிடம் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா.
நான் எங்கு சென்றாலும், ஹோட்டல், உணவு விடுதி, ரூம் சர்வீஸ் என்று எங்கு பார்த்தாஅலும் 100வது சதம் பற்றியே பேசினர். ஒருவரும் எனது 99 சதங்களைப் பற்றி பேசவில்லை. யாருமே எனது 99 சதங்களைப் பற்றி பேசவில்லை என்பது எனக்கு மன ரீதியாக் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இன்று இந்த சதத்தை எடுப்பதற்குள் நான் 50 கிலோ எடை குறைந்தது போல் உணர்கிறேன். என்று 100 வது சதமடித்த பின்னர் சச்சின் தெரிவித்தது உண்மையில் அவருக்கு இருந்த மன அழுத்தத்தை வெளிக்காட்டியது.
33 ஆயிரம் ரன்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார் சச்சின். 99 வது சதத்தை கடந்த வருடம் உலக கோப்பையில் அடித்த சச்சின் ஒரு வருடங்களின் பின்னர் இப்போது 100 வது சதத்தை அடித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் தனி ஒரு வீரரின் சாதனைக்காக உலகமே காத்துக்கிடந்தது சச்சினுக்காக மட்டும் தான் இருக்க முடியும். அதற்கு ஊடகங்களின் பங்கும் அதிகம் என்றால் மிகையில்லை.
வங்கதேச அணிக்கு எதிராக இதுவரை சச்சின் சதமடிக்கவில்லை என்ற குறையை இன்று இச்சாதனையை நிகழ்த்தி முறியடித்தார் சச்சின்.
எனினும் கிரிக்கெட் அணிகளில் ஆல் ரவுண்டராக பலம் பொருந்திய அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதமடித்த ஒரே வீரர் சச்சின். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 20 சதங்கள் அடித்துள்ளார் அவர்.
ஒரு நாள் போட்டியொன்றில் 200 ரன்களும் எடுத்துள்ளார் சச்சின்.
சச்சின் சாதனையை பிரதமர் மன்மோகன்சிங், விளையாட்டு துறை அமைச்சர் அஜய்மாக்கான், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்.
இதுவரை அல்லது இதற்கு பிறகும் நிகழ்த்தப்பட முடியாத 100வது சதம் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார் சச்சின். என அமிதாப் பச்சன் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
100*100 = 1.2 பில்லியன் பேர் நிம்மதியுடன் நித்திரைக்கு செல்வர் என மற்றுமொருவர் வாழ்த்தியுள்ளார்.
தனுஷ் சச்சினைப் பற்றி கூறும் போது ஹே கமோன் சச்சின் - எல்லாம் வல்ல கிரிக்கெட்டின் கடவுள். வாழ்க சச்சின் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுங்கள், கனவுகளைத் துரத்துங்கள், கனவுகள் மெய்ப்படும். நான் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல 22 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறியுள்ளார் சச்சின்.
sachin always ultimate..........
ReplyDeleteThats True...
ReplyDelete