படி-1: உங்கள் உலவியின் அட்ரஸ் பாரில் about:config என்று டைப் செய்து எண்டர் கொடுங்கள்..
படி-2: கீழே உள்ளது போல ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும் அதில் I'll be careful என்பதனை க்ளிக் செய்திடுங்கள்.
படி-3: இப்போது தோன்றும் விண்டோவில் Filter என்ற இடத்தில் network.http என்று டைப் செய்யவும்.
படி-4: இப்போது தெரியும் செட்டிங்குகளில் பின்வருவனவற்றை அதில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்.
- “network.http.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
- “network.http.proxy.
pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும். - “network.http.pipelining.
maxrequests” என்பதை 30 என்று செட் செய்யவும்.
படி-5: அதே விண்டோவில் ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்து அதில் New-->Integer என்பதை தேர்வு செய்து தோன்றும் ஒரு விண்டோவில் பின்வருமாறு டைப் செய்யவும் nglayout.initialpaint.delay. பின் அதன் மதிப்பை 0 என்று கொடுக்கவும்.
அவ்வளவுதான் உங்கள் உலவியை மறுதுவக்கம் செய்து பாருங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும்.
No comments:
Post a Comment