எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் கள், தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான பைல்கள் கிடைத்தால், திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள். ஏனென்றால், மாறா நிலையில், இந்த புதிய தொகுப்புகள், ஆபீஸ் 2003 தொகுப்பினால், திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக, வேர்ட் 2003 தொகுப்பில் ‘doc’ என்ற பார்மட்டில் டாகுமெண்ட்கள் சேவ் செய்யப்படுகின்றன. ஆனால் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இவை ‘docx’ என்ற பார்மட்டில் சேவ் செய்யப்படுகின்றன. இதே போல் பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களும் புதிய பார்மட்டில் கிடைக் கின்றன. இவற்றை எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் திறந்து படிக்க, மீண்டும் இவற்றை புதிய பதிப்பு புரோகிராம்களில் திறந்து, பின்னர் Save அண் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வேர்ட் 2003 பிரிவினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.
இப்போது இந்த தளம் இன்னும் ஒரு வசதியைத் தருகிறது. மின் அஞ்சல் வழியாக, நாம் பார்மட் மாற்ற வேண்டிய பைல்களை அனுப்பினால், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாற்றப்பட்டு, மீண்டும் மின் அஞ்சல் முகவரிக்கு, லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த தளம் சென்று, பைல்களை அப்லோட் செய்திடத் தேவை இல்லை.
iPhone, iPad, Android or Blackberry ஆகிய சாதனங்களில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருந்தால், அவை வழியாகவும் பைலை அனுப்பி, மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ பைல், மேலே கூறப்பட்ட சாதனங்களில் பார்க்க இயலாத பார்மட்டில் இருந்தால், மின்னஞ்சல் மூலம் அனுப்பி, சாதனங்களில் பார்க்கும் வகையில் மாற்றிப் பெறலாம்.
இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் www.zamzar.com என்ற தளத்தில் உள்ள FAQ பக்கத்தில் தேடிப் பெறலாம்.
No comments:
Post a Comment