பில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியான இவர் மிகச் சாதாரணமாக தனது பெண் தோழியுடன் சீனத் தெருவொன்றில் சுற்றுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.
மிகச் சாதாரணமாக உடை அணிந்து உள்ளூர்க் காதலர்கள் போல நடமாடும் இவர்களை ஒரு புகைப்பட நிரூபர் இவர்களுக்குத் தெரியாமலே புகைப்படம் எடுத்துள்ளார். இன்று சமூக ஊடகங்களிலேயே ராஜாவாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவனரான Mark Zuckerberg உம் அவரது காதலியான Priscilla Chan உம் ஜோடியாகச் சுற்றும் காட்சிகளே இவை.
காதலியான Priscilla Chan சீனா -அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவர் . நேற்று மதியம் சீனாவின் Fuxing வீதியில் உள்ள நிதி வர்த்தக மையத்தில் தான் மேற்படி ஜோடிகள் இருவரும் காணப்பட்டார்கள். பேஸ்புக்கை தற்போது உலகெங்கிலும் இருந்து 845 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. காதலர்களாக உள்ள இருவரும் எட்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான Harvard இல் கல்வி பயின்றவர்கள். அந்த நேரத்தில் இருவரும் சாதாரண மாணவர்கள் தான். ஆனால் பேஸ்புக்கின் நிறுவனர் தற்போது இளவயதில் கோடீஸ்வரராக உள்ள பெருமையைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment