/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, March 15, 2012



BSNL vs ATab vs Aakash மலிவு விலை டேப்லேட் கணினிகளில் எது சிறந்தது?

இந்தியாவில் முதல் முறையாக மிகவும் குறைவான விலையில் Datawind நிறுவனம் Aakash என்ற மலிவுவிலை டேப்லட் கணினிகளை வெளியிட்டது. அடுத்து இதன் அப்டேட்டட் வெர்சன் UBISLATE7 கணினிகள் வர இருக்கிறது என அறிவிப்பு வந்தவுடன் ஆர்டர்கள் குவிந்தன. சில சிறந்த வசதிகளுடன் மலிவான விலையில் கிடைத்தால் ஆளாளுக்கு போட்டி போட்டுகொண்டு இந்த டேப்லேட்களை முன்பதிவு செய்தனர். ஆனால் இன்று வரை அது யாருக்குமே கிடைக்க வில்லை என்பது தான் உண்மையான நிலை. அரசுக்கும் Datawind நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாட்டினால் Datawind நிறுவனம் இதிலிருந்து விலகியது. இப்பொழுது Ubislate7 டேப்லேட்டை இந்திய அரசே வெளியிட போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இது ஒரு புறமிருக்க இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான BSNL Pantel நிறுவனத்துடன் இணைந்து Rs. 3250 விலையில் தற்பொழுது மலிவு விலை கணினிகளை வெளியிடப்போவதாக அறிவித்து உள்ளது. ஏற்க்கனவே ஒரு லட்சத்தை தாண்டி விட்டது இதன் முன்பதிவு எண்ணிக்கை. இவை இரண்டோடு போட்டி போடும் வகையில் மற்றொரு நிறுவனம் ATab என்ற டேப்லேட் கணினிகளை Rs. 5000/- விலையில் வெளியிட போகிறதாம். 
ஆகவே இப்பொழுது பெரும்பாலானவர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ள குழப்பம் இவை மூன்றில் எது சிறந்தது என்பது தான். கீழே இதன் வசதிகள் பற்றிய Comparison Table பாருங்கள்.
Specfication ATab BSNL-IS701R AKASH-Ubislate7
Processor 1.1 GHz 1 GHz Cortex A8 – 700 Mhz
OS  Android Android2.3 Android2.3
Price Rs.5000 Rs.3250 Rs.2999
RAM 512MB 256MB 256MB
Battery 3200mAH 3000mAH 3200mAH
Screen 7" TFT 7" 7" 
ROM 2GB 2GB 2GB
Expandable 16GB 32GB 32GB
Connectivity Wi-Fi GPRS (or) Wi-Fi GPRS (or) Wi-Fi
USB Ports 1 1 2
Voice calling No No Yes

என்னை பொறுத்த வரையில் Atab டேபெல்ட் கணினிகள் 1.1GHz Processor மற்றும் 512MB கொண்டுள்ளதால் இணையத்தில் வேகமாக உலவ முடியும். ஆனால் இந்த நிறுவனம் வெறும் 10,000 கணினிகள் மட்டும் வெளியிட உள்ளதால் அனைவரும் இந்த கணினிகளை பெற முடியாது.
இதற்கடுத்து பார்க்கும் பொழுது BSNL சிறந்ததாக உள்ளது. அரசு நிறுவனம் என்பதால் நம்பிக்கையுடன் வாங்கலாம். 
இந்த இரண்டு கணினிகளிலும் இல்லாத ஒரு வசதி voice calling  ஆகாஷ் கணினிகள் உள்ளது.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget