ஜிமெயில் கணக்கை மற்றவங்க களவு எடுக்காம இருக்க நாங்க என்ன தான் செய்கிறது என்று நினைப்பீர்கள். அதற்கான விடையை ஜிமெயில் உங்களுக்கு தருகின்றது. வாருங்கள் பார்போம் உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்போம் என்று.
இதே கணினியில் நீங்கள் 30 நாள் லாகின் செய்து கொள்ளலாம். வேறு புதிய கணினிகளில் லாகின் செய்ய முயன்றால் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது உங்கள் மொபைலுக்கு வரும் verification எண்ணையும் கொடுக்கவேண்டும்.
அப்பொழுது தான் லாகின் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் login செய்ய முயலாமல் உங்களுக்கு இந்த verifiaction நம்பர் SMS வந்தால் யாரோ ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை அறிந்து உள்ளார் அவர் login செய்ய முயற்சி செய்கிறார் என அர்த்தம் உடனே உங்களின் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.
- முதலில் உங்கள் ஜிமெயிலை திறந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்
- பின்பு வரும் விண்டோவில் Personal பகுதியில் உள்ள Using 2-step verification என்பதை தெரிவு செய்யுங்கள்.(உங்கள் தொலைபேசியை அருகில் வைத்திருங்கள்)
- அடுத்த பக்கத்தில் Set up 2-Step Verification உள்ள Start setup என்ற பொத்தானை அழுத்தவும்.
- அடுத்து உங்களுடைய நாடு, உங்களுடைய தொலைபேசி எண் என்பவற்றை பதிவு செய்யுங்கள்.
- உங்கள் விவரங்களை தேர்வு செய்து கீழே உள்ள Send code என்ற பட்டனை அழுத்தவும்.
- உடனே உங்கள் மொபைலுக்கு கூகுளில் இருந்து ஒரு SMS வரும். அந்த எண்ணை குறித்து கொண்டு இங்கு கீழே இருக்கும் Code என்ற இடத்தில் கொடுத்து அருகில் உள்ள Verify என்ற பட்டனை அழுத்தவும்.
- அடுத்து உங்கள் மொபைல் verify செய்யப்பட்டது என்ற செய்தியுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
- ஒருவேளை இந்த போன் வேலை செய்யவில்லை அல்லது திருடப்பட்டுவிட்டது என்றால் என்ன பண்ணுவது அதற்க்கு Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு 10 verification number இருக்கும் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய போன் வேலை செய்யாமல் இருந்தால் இந்த நம்பர்களை வைத்து உங்கள் அக்கௌண்டில் உள் நுழையலாம். இந்த ஒவ்வொரு நம்பரிலும் ஒருமுறை மட்டுமே உள் நுழைய முடியும்.
- அடுத்து அங்கு உள்ள சிறிய கட்டத்தில் (yes i have copied) டிக் குறியிட்டு கீழே உள்ள Next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து வரும் விண்டோவில் உங்களின் வேறு ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து Next க்ளிக் செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் உள்ள NEXT பட்டன் க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உள்ள Turn on 2-Step Verification என்பதை க்ளிக் செய்யவும்.
- உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் OK என்பதை கொடுத்து விட்டால் உங்களுக்கு ஜிமெயில் லாகின் பக்கம் வரும் அதில் உங்களுடைய ID , PASSWORD கொடுத்தவுடன் உள்ளே செல்லாமல் இன்னொரு பக்கம் செல்லும் அதே நேரத்தில் உங்கள் மொபைலுக்கும் ஒரு SMS வரும்.
- அதை குறித்து அந்த பக்கத்தில் சரியாக கொடுத்து கீழே உள்ள சிறிய கட்டத்தை டிக் செய்து VERIFY பட்டனை அழுத்திவிடவும்.
இதே கணினியில் நீங்கள் 30 நாள் லாகின் செய்து கொள்ளலாம். வேறு புதிய கணினிகளில் லாகின் செய்ய முயன்றால் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது உங்கள் மொபைலுக்கு வரும் verification எண்ணையும் கொடுக்கவேண்டும்.
அப்பொழுது தான் லாகின் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் login செய்ய முயலாமல் உங்களுக்கு இந்த verifiaction நம்பர் SMS வந்தால் யாரோ ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை அறிந்து உள்ளார் அவர் login செய்ய முயற்சி செய்கிறார் என அர்த்தம் உடனே உங்களின் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.
No comments:
Post a Comment